'நம்ம கிளினிக்' சுகாதார மையம் வாயிலாக வீடு வீடாக சென்று சிகிச்சை அளிக்க திட்டம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
பெங்களூரு-'நம்ம கிளினிக்' சுகாதார மைய திட்டத்தின் கீழ், வீடு, வீடாக சென்று சிகிச்சை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் 'நம்ம கிளினிக்' எனும் சுகாதார மையம் அமைப்பதற்கு கர்நாடக அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் வழங்கியது. இது போன்று, மற்ற நகரங்களிலும், பேரூராட்சிகளிலும் ஆரம்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த சுகாதார

பெங்களூரு-'நம்ம கிளினிக்' சுகாதார மைய திட்டத்தின் கீழ், வீடு, வீடாக சென்று சிகிச்சை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் 'நம்ம கிளினிக்' எனும் சுகாதார மையம் அமைப்பதற்கு கர்நாடக அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் வழங்கியது. இது போன்று, மற்ற நகரங்களிலும், பேரூராட்சிகளிலும் ஆரம்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த சுகாதார மையங்கள் எப்படி செயல்படும், என்னென்ன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய், டெங்கு, காலரா, மலேரியா உட்பட 14 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, அறிக்கை வழங்கப்படும். தேவையெனில் உயர் சிகிச்சைக்கு வேறு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும்.மேலும், கர்ப்பிணி, தாய்மார்கள், குழந்தைகளுக்கு 12 வகையான பரிசோதனைகள் செய்யப்படும். கர்ப்பிணிகள் குழந்தை பெற்று, ஓராண்டு வரை பராமரிக்கப்படுவர்.அதுவும் வீடு, வீடாக மருத்துவர்களே நேரில் சென்று ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் உடல் நலன் குறித்து தீர விசாரிப்பர். சில நோய்களுக்கு உடனடியாக அங்கேயே மருந்தும் வழங்குவர். சில நோய்களுக்கு கிளினிக்கிற்கு அழைத்து வந்தும் பரிசோதிப்பர்.அரசின் இந்த திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்குமா என்பது, அமலுக்கு வந்த பின் தெரியும்.கிராம பகுதிகளில் 15 ஆயிரம் பேருக்கு ஒன்று வீதமும், நகர்ப்புறங்களில் 50 ஆயிரம் பேருக்கு ஒன்று வீதமும் 'நம்ம கிளினிக்' அமைக்க சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X