ரோட்டில் கிடந்த ரூ.40 ஆயிரம்: போலீசில் ஒப்படைத்த மாணவி

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடத்தில், ரோட்டில் கிடந்த, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை, போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு, போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.பல்லடத்தை சேர்ந்த ரமேஷ் -- பிரியா தம்பதி மகள் தர்ஷினி, 12; பல்லடம் ப்ளூ பேர்டு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். நேற்று மதியம், என்.ஜி.ஆர்., ரோடு கடைவீதி பகுதியில், பிரியா, துணி எடுப்பதற்காக தர்ஷினியையும் அழைத்து சென்றார்.துணிக்கடை அருகே
ரோட்டில் கிடந்த ரூ.40 ஆயிரம்: போலீசில் ஒப்படைத்த மாணவி

பல்லடம்:பல்லடத்தில், ரோட்டில் கிடந்த, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை, போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு, போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.பல்லடத்தை சேர்ந்த ரமேஷ் -- பிரியா தம்பதி மகள் தர்ஷினி, 12; பல்லடம் ப்ளூ பேர்டு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். நேற்று மதியம், என்.ஜி.ஆர்., ரோடு கடைவீதி பகுதியில், பிரியா, துணி எடுப்பதற்காக தர்ஷினியையும் அழைத்து சென்றார்.
துணிக்கடை அருகே செல்லும்போது, 40 ஆயிரம் ரூபாய் பணம் ரோட்டில் கிடந்தது. பணத்தை எடுத்த தர்ஷினி, பிரியாவிடம் அதை கொடுத்தார். தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷன் சென்ற இருவரும், பணியில் இருந்த எஸ்.ஐ., இளங்கோவனிடம், பணம் ரோட்டில் கிடந்த விவரத்தை கூறி பணத்தை ஒப்படைத்தனர்.ரோட்டில் கிடந்த பணத்தை பொறுப்புடன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த பள்ளி மாணவி தர்ஷினி, அவரது தாய் பிரியா ஆகியோரை போலீசார் பாராட்டினர். விசாரணைக்கு பின், பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X