நடுவானில் கோளாறு விமானம் தரையிறக்கம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
புதுடில்லி:புதுடில்லியில் இருந்து ஜபல்பூருக்குச் சென்ற 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில், நடுவானில் கோளாறு ஏற்பட்டதால், புதுடில்லிக்கு திருப்பப் பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.புதுடில்லியிலிருந்து, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை புறப்பட்டது. நடுவானில், ௫,௦௦௦ அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது, விமானத்துக்குள் புகை வெளியானது.
நடுவானில் கோளாறு விமானம் தரையிறக்கம்

புதுடில்லி:புதுடில்லியில் இருந்து ஜபல்பூருக்குச் சென்ற 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில், நடுவானில் கோளாறு ஏற்பட்டதால், புதுடில்லிக்கு திருப்பப் பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புதுடில்லியிலிருந்து, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை புறப்பட்டது. நடுவானில், ௫,௦௦௦ அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது, விமானத்துக்குள் புகை வெளியானது. இதைஅடுத்து, புதுடில்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தகவல் கொடுத்தார்.விமானம் புதுடில்லிக்கு திரும்ப அனுமதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, புதுடில்லி விமான நிலையத்துக்கு திரும்பிய விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணியர் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறங்கினர். கடந்த இரண்டு வாரங்களில், ஐந்தாவது முறையாக ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கோளாறு ஏற்பட்டு, தரையிறக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X