சர்வதேச செஸ் போட்டி ஏற்பாடுகள் தீவிரம்:தலைமை செயலர் இன்று ஆய்வு

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:மாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்பணிகள் குறித்து தலைமை செயலர் இறையன்பு, இன்று ஆய்வு செய்கிறார்.மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இம்மாதம் 28 முதல், ஆக்ஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. 188 நாடுகளின், 343 அணியினர் பங்கேற்கின்றனர்.இதையடுத்து, சர்வதேச செஸ் வீரர்கள், மாமல்லபுரம், சுற்றுப்புற
சர்வதேச செஸ் போட்டி ஏற்பாடுகள் தீவிரம்:தலைமை செயலர் இன்று ஆய்வு

மாமல்லபுரம்:மாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்பணிகள் குறித்து தலைமை செயலர் இறையன்பு, இன்று ஆய்வு செய்கிறார்.
மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இம்மாதம் 28 முதல், ஆக்ஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. 188 நாடுகளின், 343 அணியினர் பங்கேற்கின்றனர்.இதையடுத்து, சர்வதேச செஸ் வீரர்கள், மாமல்லபுரம், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 21 விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தங்க, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாமல்லபுரத்தில் போட்டி நடக்கும் விடுதி வளாகத்தில், கூடுதல் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது.இதன் அருகில், 2,000 எண்ணிக்கை, 500 எண்ணிக்கை என, தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள், இப்பகுதிக்கு, கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து அணுகுபாதை உள்ளிட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.மாமல்லபுரம் நகர் பகுதியில், பேரூராட்சி நிர்வாகம், மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு உள்ளது.
இந்நிலையில், தலைமை செயலர் இறையன்பு, போட்டி ஏற்பாடுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள 18 குழுவினருடன், இப்பணிகளின் நிலை குறித்து இன்று ஆய்வு செய்கிறார்.இதையடுத்து, போட்டி ஏற்பாடு பணிகள் நிலை குறித்து, அவரிடம் விளக்க, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், நேற்று ஆய்வு செய்தார்.நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், நெடுஞ்சாலை, மின் வாரியம், காவல் துறையினர், பிரத்யேக வரைபடத்துடன், கலெக்டரிடம் விளக்கினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X