அச்சிறுப்பாக்கத்தில் நாளை திறன் மேம்பாட்டு பயிற்சி

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் 'தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா யோஜனா' திட்டத்தின் கீழ், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது.திருக்கழுக்குன்றம் தென் மாடவீதி பகுதியில் உள்ள 'ஏஸ் ஸ்கில்

அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் 'தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா யோஜனா' திட்டத்தின் கீழ், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது.
திருக்கழுக்குன்றம் தென் மாடவீதி பகுதியில் உள்ள 'ஏஸ் ஸ்கில் டெவெலப்மென்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில், நாளை துவங்குகிறது.ஐந்து மாத மொபைல் போன் சரிபார்ப்பு பயிற்சி, நிறுவனங்களில் கணக்கு வழக்கு பார்க்க, நான்கு மாத கணக்கு பதிவியல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாகவும், போக்குவரத்திற்கான கட்டணம் ஒரு நாளைக்கு 125 ரூபாயும் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்ததும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.ஐ.டி.ஐ., டிப்ளமோ., பொறியியல் மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த, 18 வயது முதல் 35 வயது உள்ள ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம்.கல்வி மற்றும் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, சுய உதவிக்குழு சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் கட்டாயம் எடுத்து வரவேண்டும்.
பெண்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்தகவலை ஊரக வாழ்வாதார இயக்கம் தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X