கட்டண தொகை வழங்க மறுப்புபிரின்டிங் நிறுவனம் வழக்கு

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
திருப்பூர்:ஜாப்ஒர்க் கட்டணத்தில் ஒரு லட்சம் ரூபாயை வழங்க மறுப்பதாக ஏற்றுமதி நிறுவனம் மீது, பிரின்டிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.திருப்பூர் - காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனம், கருவம்பாளையம் பிரின்டிங் நிறுவனத்துக்கு ஜாப்ஒர்க் ஆர்டர் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் பிரின்டிங் நிறுவனம், துணியில் பிரின்டிங்

திருப்பூர்:ஜாப்ஒர்க் கட்டணத்தில் ஒரு லட்சம் ரூபாயை வழங்க மறுப்பதாக ஏற்றுமதி நிறுவனம் மீது, பிரின்டிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.திருப்பூர் - காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனம், கருவம்பாளையம் பிரின்டிங் நிறுவனத்துக்கு ஜாப்ஒர்க் ஆர்டர் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் பிரின்டிங் நிறுவனம், துணியில் பிரின்டிங் செய்துகொடுத்துள்ளது.இந்நிலையில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கட்டண தொகையை வழங்க மறுப்பதாக, ஏற்றுமதி நிறுவனம் மீது, பிரின்டிங் நிறுவனம், ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் அளித்துள்ளது.இதுகுறித்து ஆர்பிட்ரேசன் தலைவர் கருணாநிதி கூறியதாவது:பிரின்டிங் கட்டணம் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதுகுறித்து எவ்வித விவரமும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை,' என கூறி, ஏற்றுமதி நிறுவன உரிமையாளர், மீத தொகை ஒரு லட்சம் ரூபாயை வழங்க மறுப்பதாக பிரின்டிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.இது ஒரு புதுமையான மற்றும் சிக்கல் நிறைந்த வழக்கு. ஆவணங்களை தணிக்கை செய்து, விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். மேலாளர்கள் நிர்ணயிக்கும் ஜாப் ஒர்க் கட்டண விவரங்கள் குறித்து, ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவன உரிமையாளர்கள் தவறாமல் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X