இளைஞர்கள் வசம், 'ஸ்டார்ட் அப்' வாய்ப்புகள்!

Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
பெங்களூரு, ைஹதராபாத், டில்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல... கோவை, திருப்பூர் போன்ற இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும், 'ஸ்டார்ட் அப்' சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதில், மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்(டான்சிம்), வரும் 2026க்குள், தமிழகத்தில் 10 ஆயிரம் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உருவாக்க
இளைஞர்கள் வசம், 'ஸ்டார்ட் அப்' வாய்ப்புகள்!பெங்களூரு, ைஹதராபாத், டில்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல... கோவை, திருப்பூர் போன்ற இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும், 'ஸ்டார்ட் அப்' சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதில், மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்(டான்சிம்), வரும் 2026க்குள், தமிழகத்தில் 10 ஆயிரம் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது.பின்னலாடை நகரான திருப்பூரில், பின்னலாடை சார்ந்த பல்வேறு துறைகள் செயல்படுகின்றன. பருத்தியில் இருந்து துவங்கி, பின்னலாடையாக அது உருவாகும் வரை பலகட்டங்களை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு துறையிலும், புதிய தேவைகளும், தீர்வுகளும் அவசியமாக இருக்கின்றன.இதேபோல், செயற்கையிழை ஆடைகளையும், எதிர்காலத்தில், திருப்பூர் அதிகளவில் தயாரித்தாக வேண்டும் என்ற கட்டாய நிலை உருவாகியிருக்கிறது. கற்றலும், புத்தாக்க சிந்தனையும் அதிகளவில் தேவைப்படும் தருணம் இது.

ஏட்டுக்கல்வி போதாது
தொழில்முனைவோர் என்போர், படித்து முடித்தவுடன் உருவாகிவிடுபவர்கள் அல்ல; அதற்கான விதை, அவர்களுக்குள், மாணவப்பருவத்திலேயே பதியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிக் காலத்தில் இருந்தே இவர்களை உருவாக்க பயிற்சியும், ஊக்கமும் அவசியமானது. கல்விக்கூடங்கள், வெறும் ஏட்டுக்கல்விக்கு முக்கியத்துவம் தராமல், புத்தாக்க சிந்தனையுடன் விளங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை எதிர்காலத் தொழில்முனைவோராக உருவாக்குவதற்கும் துணைபுரிய வேண்டும்.ஏற்கனவே தொழில்துறையின் நாடி அறிந்த திருப்பூர் பகுதியில் பயிலும் மாணவர்களை, இதற்கேற்ப கல்வி நிறுவனங்கள் தயார்ப்படுத்துவதும் எளிதுதான். மதிப்பெண் இயந்திரங்களாக மட்டும் அல்லாது, பெரும் தொழில்முனைவோராக மாற்றுவதற்கான விஷயங்கள் மாணவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டியதும் அவசியம்.திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள அடல் இன்குபேஷன் மையம், பல்வேறு புதுமை ஆடைத்தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவகையில், பல்வேறு இயற்கை சார்ந்த துணி ரகங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை ஆராய்ந்தும், கண்டறிந்தும் வருகிறது. பட்டு பின்னலாடைகளை உருவாக்குவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது. திருப்பூரில் 50 'ஸ்டார்ட் அப்'களை உருவாக்கும் எண்ணத்துடன் செயல்படுகிறது. இதற்கு இளம் தொழில்முனைவோரின் ஒத்துழைப்பு அவசியமானதாக இருக்கிறது.

இளைஞர்கள்கைகொடுக்கட்டும்
'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில், தமிழகம், நாட்டின் முதல் மூன்று இடங்களுக்குள் வர வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருக்கிறது. அதற்கு திருப்பூர் பகுதி இளைஞர்கள் கைகொடுக்க முடியும்.கொரோனா காலத்தில் தொழில்கள் தேக்க நிலையைச் சந்தித்தன. அப்போதும் கூட திருப்பூர் நிறுவனங்கள் மனம் தளராமல் தொழிலை தொடர்ந்து மேற்கொள்வதில் அக்கறை காட்டின. வேலைவாய்ப்புகள் பறிபோன காலத்தில் கூட, பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கின. இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்தாலும், அவர்களுக்கும் பணி வாய்ப்புகள் தாராளமாக இருக்கின்றன.பல தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வரும் சூழலில், திருப்பூர் பகுதி இளைஞர்கள் புத்தாக்க சிந்தனையுடன் தொழில் துவங்குவதன் மூலம், எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர முடியும்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X