விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை எதிர்த்து அமெரிக்க எம்.பி.,க்கள் பைடனுக்கு கடிதம்

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
வாஷிங்டன்-விவசாயிகளுக்கு இந்தியா அதிக மானியம் அளிப்பதை தடுத்து நிறுத்த, உலக வர்த்தக அமைப்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.அமெரிக்க பார்லிமென்ட் எம்.பி.,க்கள் டிரேசி மான், ரிக் கிராபோர்டு உட்பட, 12 எம்.பி.,க்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது:உலக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்-விவசாயிகளுக்கு இந்தியா அதிக மானியம் அளிப்பதை தடுத்து நிறுத்த, உலக வர்த்தக அமைப்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.அமெரிக்க பார்லிமென்ட் எம்.பி.,க்கள் டிரேசி மான், ரிக் கிராபோர்டு உட்பட, 12 எம்.பி.,க்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.latest tamil news
அதில் கூறியுள்ளதாவது:உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படி, எந்த ஒரு நாடும் தன் நாட்டில் விவசாயிகள் செய்யும் உற்பத்தியில், 10 சதவீதத்துக்கு மட்டுமே மானியம் வழங்க வேண்டும். ஆனால், இந்தியா, நெல், கோதுமை உட்பட பல விவசாய உற்பத்தி பொருட்களுக்காக விவசாயிகளுக்கு, 50 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது.இது தொடர்பாக பல முறை முறையிட்டும், தன் நிலைப்பாட்டில் இருந்து இந்தியா மாற மறுக்கிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால், சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. சர்வதேச அளவில், விவசாயப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.


latest tamil newsஇதனால், அமெரிக்க விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே, இந்தியாவின் இந்த ஆபத்தான வர்த்தக நடைமுறைக்கு எதிராக, உலக வர்த்தக அமைப்பில் விவாதிக்க அமெரிக்கா வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த பிரச்னை தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மானியத்தை குறைக்க முடியாது என்ற தன் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்காக இந்தியாவுக்கு பல நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
03-ஜூலை-202218:07:57 IST Report Abuse
Kalyan Singapore அன்புள்ள நடேசன் விவசாயிகள் மானியத்தை இந்தியாவில் நிறுத்தினால் இங்கு கொடுமை கிலோ 1000 ரூபாய் விற்கும். அதற்கேற்றாற் போல் சம்பளம் அமெரிக்கா டாலருக்கு நிகராக இருக்கும். பின் எவன் அமெரிக்க வர முயற்சிப்பான்? அல்லது அமெரிக்க கம்பெனிக்கு இங்கிருந்து வேலை செய்வான்? இதன் விளைவு உங்கள் அமெரிக்காவில் SERVICESன் விலைகள் பன்மடங்காக எகிறும். நீங்கள் தான் ஏற்கனவே 40 வருடம் முன்னாடியே அமெரிக்காவின் தயாரிப்பை எல்லாம் சீனாவிடம் அடகு வைத்து விட்டீர்களே. கிலோ 1000 ரூபாய் விற்றால் எந்த விவசாயி ஏற்றுமதி செய்வான்? மேலும் டாலர் இதுபோல் என்றும் உலக நாணயமாக தொடர வாய்ப்புக்களுக்கு ஆட்டம் காண்கிறது. அதுவும் மாறிவிட்டால் இந்திய தூதரக வாசலில் இந்தியாவில் வேலைக்கு வர வரிசையில் நிற்க வேண்டி வரும். சொந்த செலவில் சூன்னியம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்கள் செனட்டர் களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்
Rate this:
Cancel
03-ஜூலை-202214:05:20 IST Report Abuse
ஆரூர் ரங் உண்மையை எழுதினாலும் கசக்கும்.. உள்நாட்டு உணவு நுகர்வுக்கு மானியம் கொடுப்பது தவறல்ல. 🤔 ஆனால் ஏற்றுமதிக்கான விவசாயத்திற்கு அதிக மானியம் என்பது உலக வர்த்தக ஒப்பந்தத்தை மீறும் செயல். இதுபோலவே எல்லா நாடுகளும் மானியம் வழங்கினால் உலக உணவு மார்க்கெட் குழப்பத்தில் வீழும். இன்னொரு இந்திய அநியாயம். ஏற்றுமதிக்காக உணவு பயிரிடுவது. அதற்காக இலட்சக்கணக்கில் ரசாயன உரத்தை இறக்குமதி செய்து மானிய விலையில் கொடுப்பது. அதனை கண்மூடித்தனமாக வயலில் கொட்டி🤪 நிலத்தடி உப்பு நீரைப் பாய்ச்சி மலடாக்கி நிலவளத்தைக் குட்டிச்சுவராக்குவது. கடைசியில் மலட்டு மண்ணும் கிழட்டு கூலித் தொழிலாளிகளும் மட்டுமே😪 மிச்சம். ஏற்றுமதி டாலர்களுக்காக மண்மாதாவை சாகடிக்காதே வேண்டாமே. இறக்குமதி பொருட்கள் பயன்பாட்டைக் குறைத்தாலே இந்த அநியாய அன்னிய செலாவணியை மிச்சப்படுத்தலாம். DOLLAR SAVED IS DOLLAR GAINED. அதிக மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்லதல்ல. சொன்னது மன்மோகன் சிங். ஆர். வெங்கட்ராமன் போன்றோர்.
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
03-ஜூலை-202209:51:14 IST Report Abuse
தமிழன் "இந்தியாவுக்கு பல நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன." - ஆனால் கொத்தடிமை தமிழன் இது பற்றி வாய் திறக்க மாட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X