கட்டட அனுமதிக்கு புதிய இணையதளம்

Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை-நகரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யில், ஒற்றை சாளர முறையில் கட்டுமான திட்ட அனுமதி பெற, புதிய இணையதளம்துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கட்டுமான திட்ட அனுமதி வழங்க, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் டி.டி.சி.பி.,க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்
கட்டட அனுமதி, புதிய, இணையதளம்

சென்னை-நகரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யில், ஒற்றை சாளர முறையில் கட்டுமான திட்ட அனுமதி பெற, புதிய இணையதளம்துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமான திட்ட அனுமதி வழங்க, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் டி.டி.சி.பி.,க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுகிறது.இதற்கு தீர்வாக, ஒற்றை சாளர முறையில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் வாயிலாக, 60 நாட்களுக்குள் பொது மக்களுக்கு கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக, சி.எம்.டி.ஏ., தரப்பில் புதிய இணையதளம் உருவாக்கி, மே 10 முதல் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பம் பெறப்படுகிறது. தற்போது, டி.டி.சி.பி.,யில், www.onlineppa.tn.gov.in என்ற புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில், பொது மக்கள் எப்படி புதிய கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகள், மாதிரி விண்ணப்பம், வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

.இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:புதிய இணையதளம் துவக்கப்பட்டு இருந்தாலும், அதில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை முகவரி உள்ளிட்ட விஷயங்கள், பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் விண்ணப்பங்கள் நிலை, திட்ட அனுமதி விபரங்களை அறிய வழி இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - Madurai,இந்தியா
03-ஜூலை-202207:15:14 IST Report Abuse
raman இணைய தளத்தை செயலிழக்கச் செய்து விடுவார்கள்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
03-ஜூலை-202204:08:43 IST Report Abuse
மலரின் மகள் டிஜிட்டல் இந்தியா என்ற ஊழலற்ற அரசு என்ற நிர்வாகத்தின்படி செய்யப்படுகிறது என்றறியலாம். அதில் ஊழலற்ற என்பது சிக்கலுக்கு உரியதாக இருக்கும்போல சிலருக்கு. சரியாக பதிவேற்றப்படமுடியாமல், submit பட்டன் செயலற்று செல்ல விளையலாம். எவ்வளவுதான் மிகச்சரியாக நிரப்பினாலும் சிலர் அதிலாரிகள் வேண்டுமென்றே சில தவறானவற்றை பதிந்து விடுவார். திசை சரியாக குறிக்கப்படாமல், அளவு சரியில்லாமல் ஆழத்து பெயரில் பிழையாக. அதை மாற்றுவதற்கும் அவர்களுக்கு ஊட்டப்படும் பணம் கையில் கிடைக்கும். இருபது முதல் ஐம்பது கோடி கிம்பளம் தீருமாம் பனிக்காலத்தில். பிரமிப்பாகத்தான் இருக்கிறது சொல்வதை கேட்டால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X