சிவசங்கர் பாபா ஆக்கிரமித்த ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
திருப்போரூர்-பாலியல் வழக்கில் சிக்கிய பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா ஆக்கிரமித்திருந்த 50 கோடி ரூபாய் மதிப்பு 7.5 ஏக்கர் நிலத்தை, வருவாய் துறையினர் நேற்று மீட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளி உள்ளது.இப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, மீது, மாணவியர் சிலர் பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி.,
 சிவசங்கர் பாபா ஆக்கிரமித்த ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு

திருப்போரூர்-பாலியல் வழக்கில் சிக்கிய பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா ஆக்கிரமித்திருந்த 50 கோடி ரூபாய் மதிப்பு 7.5 ஏக்கர் நிலத்தை, வருவாய் துறையினர் நேற்று மீட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளி உள்ளது.

இப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, மீது, மாணவியர் சிலர் பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர் மீது 'போக்சோ' வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். அரசுக்கு சொந்தமான சில இடங்களை, சிவசங்கர் பாபா ஆக்கிரமித்துள்ளதாக, ஏற்கனவே புகார் இருந்தது.இந்நிலையில், கேளம்பாக்கம் ஊராட்சியில் குப்பை கொட்டுவதற்கு ஏற்ற இடம் இல்லை என்பதால், அரசு நிலங்கள் எங்கெல்லாம் உள்ளது என, கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில், சிவசங்கர் பாபாவின் பள்ளி வளாகத்தில், அரசுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.5 ஏக்கர் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து, வண்டலுார் தாசில்தார் பாலாஜி, கேளம்பாக்கம் போலீசார் பாதுகாப்புடன், இரண்டு ஜே.சி.பி., இயந்திரம் மூலம், பள்ளியின் அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்களை இடித்து அகற்றி, இடத்தை மீட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Navakoti - Houston,யூ.எஸ்.ஏ
04-ஜூலை-202221:12:01 IST Report Abuse
Navakoti Will actions be taken against all religious, private, educational, and other organisations?
Rate this:
Cancel
Navakoti - Houston,யூ.எஸ்.ஏ
04-ஜூலை-202221:06:18 IST Report Abuse
Navakoti Will action would be taken on all religious, private and so called education organizations?
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
03-ஜூலை-202217:37:00 IST Report Abuse
raghavan ஆமா, இந்த முரசொலி மூல பத்திரம்????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X