வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள, அ.தி.மு.க., முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தனக்கே தெரியாத சமூக நீதி குறித்து, தி.மு.க.,வுக்கு பாடம் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
![]()
|
பட்டியலின சமூகத்தில் இருந்து, கே.ஆர்.நாராயணனை ஜனாதிபதியாக்கியது, தி.மு.க.,வும், கருணாநிதியும் தான். லோக்சபா சபாநாயகராக ஜெகஜீவன்ராம் மகள் மீரா குமார் தேர்வு செய்யப்படுவதற்கு, தி.மு.க., உறுதுணையாக இருந்தது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு, இட ஒதுக்கீடை உயர்த்தியது, உள் இட ஒதுக்கீடு அளித்து, உணமையான சமூக நீதியை அளித்தது, தி.மு.க., அரசும், கருணாநிதியும் தான். இது பழனிசாமிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
![]()
|
அதை தெரிந்து கொள்ளும் மன நிலையில் அவர் இல்லை. ஜெயலலிதா அமர்ந்த பொதுச்செயலர் பதவியில், தான் எப்படி குறுக்குசால் ஓட்டி அமர்வது, அதற்கு கோடி கோடியாக கரன்சி நோட்டுகளை எப்படி அள்ளி விடுவது என்ற ஆலோசனையில், அவர் மூழ்கியிருப்பதால், யாரின் கீழ் கட்சி இருக்கிறது என்பது தெரியாமல் தவிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement