வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ஒரு வழியாக உத்தவ் தாக்கரே பதவி விலக, சிவசேனா அதிருப்தியாளர் குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிரா முதல்வர் ஆகியிருக்கிறார்.இந்த விவகாரத்தில் பா.ஜ., அரசியல் சாணக்கியத்தனத்தை நடத்தியுள்ளது. அனைத்து 'மீடியா'க்களும் பா.ஜ., முன்னால் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தான் முதல்வராவார் என 'ப்ளாஷ்' செய்தி வெளியிட்டன.
![]()
|
ஆனால் திடீர் திருப்பமாக ஷிண்டே தான் முதல்வர் என அறிவிக்கப்பட்டது.பட்னவிஸ் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். சென்ற முறை அவர் முதல்வராக இருந்த போது, பா.ஜ., ஒரு மராட்டாவை முதல்வர் பதவியில் அமர்த்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இந்த முறை பா.ஜ., ஒரு மராட்டாவை முதல்வர் பதவியில் அமர வைத்து அருமையாக காய் நகர்த்தியது. ஷிண்டேவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அல்லது தேசியவாத காங்., தலைவர் பவார் வாய் திறக்கவில்லை.
இந்த வருட இறுதியில் மும்பை, புனே மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக சிவசேனா, பா.ஜ., கூட்டணி தான் இந்த இரண்டிலும் ஆட்சி செய்து வருகின்றன. குறிப்பாக மும்பை மாநகராட்சி பணம் கொட்டும் இடம். இதில் வரும் பணத்தை வைத்து தான் கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. காங்கிரசை எதிர்த்து ஓட்டு வாங்கிய சிவசேனா, தற்போது காங்., - தேசியவாத காங்., கூட்டணியில் இருக்கும் நிலையில் ஓட்டு வாங்க முடியாது.தவிர, ஹிந்துத்வா கொள்கையை வைத்து அரசியல் நடத்திய சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் நீடித்தால், ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்காது.
![]()
|
எனவே ஷிண்டே வெளியே வந்து உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக திரும்பிவிட்டார்.முதலில் எனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என்று சொன்ன பட்னவிஸ், பின் கட்சியின் தேசிய தலைவர் நட்டா கேட்டுக் கொண்டதும் ஒத்துக் கொண்டு துணை முதல்வரானார்.ஆனால், 'இதெல்லாம் ஒரு நாடகம்; ஏற்கனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்தது தான் மஹா.,வில் அரங்கேறியிருக்கிறது' என்கின்றனர், சீனியர் பா.ஜ., தலைவர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement