வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்கிரசை பலவீனமாக்க பா.ஜ., பல வேலைகளை செய்து வருகிறது. காங்கிரசின் முக்கிய தலைவர்களை தன் பக்கம் இழுப்பதில், பா.ஜ., இதுவரையிலும் வெற்றி கண்டுள்ளது.ஏற்கனவே, ஜோதிராதித்ய சிந்தியா, ஆர்.பி.என் சிங் என பல முன்னாள் காங்., அமைச்சர்கள் பா.ஜ.,வில் உள்ளனர்.
![]()
|
இந்த 'லிஸ்டில்' இப்போது இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலாமவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா. இவருடைய ராஜ்யசபா பதவி சமீபத்தில் முடிந்தது.உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை அடிக்கடி சந்தித்து வரும் ஆனந்த் சர்மா, விரைவில் பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார் என, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், ஆனந்த் சர்மா இதை 'வதந்தி, பொய்' என்கிறார்.
இன்னொரு காங்., தலைவர் சச்சின் பைலட். இவர் ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்தார். இவருக்கும், முதல்வர் அசோக் கெலாட்டிற்கும் ஆகவே ஆகாது. தன்னை முதல்வர் ஆக்காமல் கெலாட்டை முதல்வராக்கிவிட்டார் என, காங்., தலைவர் சோனியா மீது வருத்தம் அடைந்து, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் வெளியேறினார். பின் சமாதானமாகி கட்சியில் அமைதியாகிவிட்டார்.
![]()
|
அடுத்த வருட இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக சச்சின் பைலட்டை தங்கள் பக்கம் இழுப்பது அல்லது மஹா.,வில் நடத்தியதைப் போல அதிருப்தியாளர்களுடன் ராஜஸ்தான் காங்கிரசை உடைப்பது என ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்கும் என்கின்றனர், பா.ஜ., மூத்த தலைவர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement