தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அமைச்சர்கள் உதவி

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: தி.மு.க., - எம்.பி.,க்கள் எங்களை எதிர்த்து அரசியல் செய்தாலும் கடைசியில் எங்களிடம் தான் உதவி கேட்டு வருகின்றனர் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். தி.மு.க.,வின் நான்கு எம்.பி.,க்கள் அடிக்கடி பா.ஜ., அமைச்சர்களை சந்தித்து உதவி கேட்டு வருகின்றனராம். இவர்கள் அமைச்சர்களை சந்திக்கும் போது, தாங்கள் நடத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் சீனியர் அதிகாரிகளையும் உடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தி.மு.க., - எம்.பி.,க்கள் எங்களை எதிர்த்து அரசியல் செய்தாலும் கடைசியில் எங்களிடம் தான் உதவி கேட்டு வருகின்றனர் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.



latest tamil news



தி.மு.க.,வின் நான்கு எம்.பி.,க்கள் அடிக்கடி பா.ஜ., அமைச்சர்களை சந்தித்து உதவி கேட்டு வருகின்றனராம். இவர்கள் அமைச்சர்களை சந்திக்கும் போது, தாங்கள் நடத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் சீனியர் அதிகாரிகளையும் உடன் அழைத்து செல்கின்றனராம்.இந்த நான்கு எம்.பி.,க்களும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை அடிக்கடி சந்தித்து வருகின்றனராம்.இவர்கள் தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், வரி விதிப்பில் விலக்கு உள்ளிட்ட பல உதவிகளை அமைச்சர்களிடம் கேட்டு வருவதாக பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.


latest tamil news



இந்த எம்.பி.,க்கள் அதிகம் சந்திப்பது வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயலைத் தான்.இந்த எம்.பி.,க்கள் அடிக்கடி வந்து எங்களை தொல்லைப்படுத்துகின்றனர். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் முடிந்ததை செய்து கொடுக்கிறோம் என்கிறாராம், ஒரு மத்திய அமைச்சர்.இந்த சந்திப்பு விஷயங்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் நன்றாகவே தெரியுமாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
09-ஜூலை-202210:12:28 IST Report Abuse
Sridhar பிஜேபி மந்திரிகளும் ஊழலுக்கு துணை போகிறார்களா?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
03-ஜூலை-202219:38:09 IST Report Abuse
r.sundaram காரியம் ஆகணும் என்றால் திமுகக்காரன் காலில் கூட விழுவான். இதுகூட பரவாயில்லை. ஒரு மேயர், தனது அங்கியுடன் சின்னவர் காலில் விழுகிறார், பார்க்கவில்லையா? மேயரின் மதிப்பு என்னவாவது? அதுபற்றி கவலை இல்லை. மேயர் பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும், முடிந்தால் அடுத்த முறையும் தானே மேயர் ஆக வேண்டும் என்பதுதானே இதன் பின்னால் இருப்பது? அல்லது நன்றி உணர்வு கொண்டு நடந்திருக்கலாம். என்னவாக இருந்தாலும் மேயர் அங்கியுடன் மற்றவரின் காலில் விழுவது தப்பு என்பது அவருக்கு தெரிய வில்லையே. ஆதலால் காரியம் ஆக வேண்டும் என்றால் காலிலும் விழுவார்கள் திமுகவினர்.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
09-ஜூலை-202210:11:40 IST Report Abuse
Sridharகாலில் "கூட" விழுவானா?...
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
03-ஜூலை-202217:39:34 IST Report Abuse
S.Ganesan திமுக எம் பிக்கள் டெல்லி செல்வது தமிழ் நாட்டுக்குக்காக அல்ல. தங்களின் சொந்த கம்பனிகளின் சலுகைகளுக்காக என்பதும், கட்சி பாகுபாடு இன்றி மத்திய அரசு உதவி செய்ததும் தெளிவாக தெரிகிறது. இதில் ஊழல் நடக்காமல் இருந்தால் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X