தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அமைச்சர்கள் உதவி| Dinamalar

தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அமைச்சர்கள் உதவி

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (26) | |
புதுடில்லி: தி.மு.க., - எம்.பி.,க்கள் எங்களை எதிர்த்து அரசியல் செய்தாலும் கடைசியில் எங்களிடம் தான் உதவி கேட்டு வருகின்றனர் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். தி.மு.க.,வின் நான்கு எம்.பி.,க்கள் அடிக்கடி பா.ஜ., அமைச்சர்களை சந்தித்து உதவி கேட்டு வருகின்றனராம். இவர்கள் அமைச்சர்களை சந்திக்கும் போது, தாங்கள் நடத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் சீனியர் அதிகாரிகளையும் உடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தி.மு.க., - எம்.பி.,க்கள் எங்களை எதிர்த்து அரசியல் செய்தாலும் கடைசியில் எங்களிடம் தான் உதவி கேட்டு வருகின்றனர் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.



latest tamil news



தி.மு.க.,வின் நான்கு எம்.பி.,க்கள் அடிக்கடி பா.ஜ., அமைச்சர்களை சந்தித்து உதவி கேட்டு வருகின்றனராம். இவர்கள் அமைச்சர்களை சந்திக்கும் போது, தாங்கள் நடத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் சீனியர் அதிகாரிகளையும் உடன் அழைத்து செல்கின்றனராம்.இந்த நான்கு எம்.பி.,க்களும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை அடிக்கடி சந்தித்து வருகின்றனராம்.இவர்கள் தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், வரி விதிப்பில் விலக்கு உள்ளிட்ட பல உதவிகளை அமைச்சர்களிடம் கேட்டு வருவதாக பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.


latest tamil news



இந்த எம்.பி.,க்கள் அதிகம் சந்திப்பது வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயலைத் தான்.இந்த எம்.பி.,க்கள் அடிக்கடி வந்து எங்களை தொல்லைப்படுத்துகின்றனர். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் முடிந்ததை செய்து கொடுக்கிறோம் என்கிறாராம், ஒரு மத்திய அமைச்சர்.இந்த சந்திப்பு விஷயங்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் நன்றாகவே தெரியுமாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X