வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர், மேயருக்குரிய அதிகாரப்பூர்வ மேலங்கியை அணிந்த நிலையில், முதல்வரின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலருமான உதயநிதி எம்.எல்.ஏ., காலில் விழும் கண்கொள்ளாக் காட்சியை, நாளிதழில் கண்டு மெய்சிலிர்த்து போனேன்.
![]()
|
சுயமரியாதையை இவர்கள் தான் கண்டுபிடித்ததைப் போல, மேடையில் தொடர்ந்து முழங்கி வரும் தி.மு.க.,வினர், நடைமுறையில் அதை பின்பற்றுவதில்லை என்பது, இந்த நிகழ்வின் வாயிலாக வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. ஆன்றோர், ஆன்மிக ஞானிகள் காலில் விழுந்த காலம் போய், அரசியல்வாதிகள் காலில் விழும் கலாசாரம் வளர்ந்து, நம் முன்னோர் காட்டிய வழியிலிருந்து விலகி, எங்கோ போய் கொண்டிருக்கிறோம் என்று எண்ணும் போது இதயம் வலிக்கிறது.
அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப, இது போன்ற செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவது வெட்கக்கேடானது என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அதை விடுத்து, மேடைக்கு மேடை சுயமரியாதையை பற்றி வாய் கிழிய பேசுவதில் அர்த்தமில்லை.
![]()
|
சுயமரியாதையை முன்மொழிந்த ஈ.வெ.ரா., இன்று இருந்திருந்தால், 'இவர்களுக்கு என்ன சொல்லியும் பலனின்றி போனதே, திருந்தவில்லையே...' என்று கண்ணீர் வடித்திருப்பார்; 'வாழ்க' திராவிட சுயமரியாதை!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement