தே.ஜ., கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் அமரீந்தர் சிங்: பா.ஜ., தலைவர்கள் தீவிர ஆலோசனை

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சண்டிகர்-துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், 80, நிறுத்தப்படுவார் என,எதிர்பார்க்கப்படுகிறது.ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், வரும், 18ம் தேதி நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், ஆகஸ்ட் 6ல் நடக்க உள்ளது. மீண்டும் வாய்ப்பு ஜனாதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்-துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், 80, நிறுத்தப்படுவார் என,எதிர்பார்க்கப்படுகிறது.ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், வரும், 18ம் தேதி நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், ஆகஸ்ட் 6ல் நடக்க உள்ளது.



latest tamil news




மீண்டும் வாய்ப்பு


ஜனாதிபதி தேர்தலுக்கு, ஒடிசாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த, ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்முவை, தேசிய ஜனநாயகக் கூட்டணி தன் வேட்பாளராக அறிவித்து உள்ளது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் எம்.பி.,க்கள் மற்றும் நியமன எம்.பி.,க்கள் ஓட்டளிக்க உள்ளனர்.போதிய பலம் இருப்பதால், பா.ஜ., நிறுத்தும் வேட்பாளர் வெற்றி உறுதியாகி உள்ளது.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படாது என்றே பரவலாக கூறப்படுகிறது. காங்கிரஸ் அதிருப்தி தலைவர் குலாம் நபி ஆசாத், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் காங்கிரசில் நீண்ட காலம் இருந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் பேசப்படுகின்றது.காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த அவர், கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதலில், தன் பதவியை இழந்தார்.


latest tamil news




எதிர்பார்ப்பு



பின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதுக்கட்சியை துவக்கிய அமரீந்தர் சிங், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்தித்தார்.தற்போது முதுகுவலிக்கு சிகிச்சை பெற ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகருக்கு சென்றுள்ளார். சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்தார்.

இந்நிலையில், அவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
03-ஜூலை-202219:30:40 IST Report Abuse
r.sundaram அமரீந்தர் சிங்க் நேற்று வரை காங்கிரெஸ்க்காரர். ராகுல் அவர்களின் போக்கு பிடிக்காமல்தான் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விளக்கினார். அவர் உடம்பில் ஓடுவது பூராவும் காங்கிரஸ் ரத்தம். ஆதலால் இக்கட்டான நேரங்களில் அவர் காங்கிரஸ் காரராகத்தான் செயல்படுவார். ஆதலால் துணை ஜனாதிபதி பதவிக்கு பிஜேபி அம்ரிந்தர் அவர்களை நிறுத்துவதற்கு முன் தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம்.
Rate this:
Cancel
Manjunathan Shan - Sydney,ஆஸ்திரேலியா
03-ஜூலை-202216:44:01 IST Report Abuse
Manjunathan Shan ஆரூரருங்
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
03-ஜூலை-202208:39:04 IST Report Abuse
Fastrack பாட்டியாலா அரச பரம்பரை ..நெஜமா ஹெப்துல்லாவுக்கும் ஆசை ,,பருக் அப்துல்லாவுக்கும் ஆசை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X