காரைக்கால் : காரைக்கால் நேரு மார்க்கெட்டை உடனடியாக திறக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.காரைக்காலில் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காரைக்கால் தனியார் மஹாலில் நடந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு இந்து முன்னணி அமைப்பாளர் பக்தன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், வரும் 9ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெறும்
'இந்துக் களின் உரிமை மீட்பு மாநாட்டில் திரளாக பங்கேற்பது.புதிய புறவழிச்சாலைக்கு ஸ்ரீ பார்வதீஸ்வரர் சாலை எனவும், ஜிப்மர் மருத்துவமனைக்கு பார்வதீஸ்வரர் ஜிப்மர் மருத்துவமனை என பெயர் சூட்ட வேண்டும்.கைலாசநாதர் கோவிலில் பசுமடத்தை மீண்டும் அமைக்க வேண்டும். திருநள்ளாறு தெற்கு வீதியில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நேரு மார்க்கெட்டை உடனடியாக திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.