அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை| Dinamalar

அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை

Added : ஜூலை 03, 2022 | |
விழுப்புரம், : விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை துவங்கியது.விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 3,600 மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற 4 மாணவிகள், கடந்தாண்டு மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்று சாதனைபடைத்தனர்.இந்தாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர நுாற்றுக்கணக்கான மாணவிகள்


விழுப்புரம், : விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை துவங்கியது.விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 3,600 மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற 4 மாணவிகள், கடந்தாண்டு மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்று சாதனைபடைத்தனர்.இந்தாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர நுாற்றுக்கணக்கான மாணவிகள் விண்ணப்பித்தனர்.இதையடுத்து பள்ளியில் விண்ணப்பித்த மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியை, நேற்று முன்தினம் பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர், தகுதி பெற்ற மாணவிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக சேர்க்கை அனுமதி வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X