ஆலோசனை கூட்டம்| Dinamalar

ஆலோசனை கூட்டம்

Added : ஜூலை 03, 2022 | |
அரியாங்குப்பம், : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் ஓட்டுச்சாவடிகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 133 வார்டுகளுக்கான 133 ஓட்டுச்சாவடிகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் மதகடிப்பட்டில் நேற்று நடந்தது.மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில்


அரியாங்குப்பம், : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் ஓட்டுச்சாவடிகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 133 வார்டுகளுக்கான 133 ஓட்டுச்சாவடிகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் மதகடிப்பட்டில் நேற்று நடந்தது.மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் நடந்த கூட்டத்திற்கு, ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார்.



மாநில தேர்தல் ஆணையத்தின் உதவி தேர்தல் அதிகாரிகள் நாகலிங்கம், ஜாகிர் உசேன், பாலபாஸ்கர், உதயகுமார் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 133 ஓட்டுச்சாவடிகளின் பெயர் பட்டியல், மன்ற தலைவர், கவுன்சிலர் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் இட ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் தெரிவிக்கப் பட்டது.அனைத்து கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வரும் உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடிகள் அமையும் என தெரிவிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X