பாக்.,கை குப்பைத் தொட்டியாக பயன்படுத்தும் வெளிநாடுகள்

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
கராச்சி : பாகிஸ்தானை கழிவுகளை கொட்டும் இடமாக, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் கழிவுகளை, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. அமெரிக்கா, பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாகிஸ்தான் கழிவுகளை இறக்குமதி
Pakistan, Dust bin, World Countries,  பாகிஸ்தான்,  குப்பைத்தொட்டி, வெளிநாடுகள்,


கராச்சி : பாகிஸ்தானை கழிவுகளை கொட்டும் இடமாக, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் கழிவுகளை, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. அமெரிக்கா, பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாகிஸ்தான் கழிவுகளை இறக்குமதி செய்கிறது.

இங்கு, கராச்சி, லாகூர், சியால்கோட், கைபர் பக்துன்க்வா, குஜ்ரன்வாலா உள்ளிட்ட பல இடங்களில், மறு சுழற்சி ஆலைகள் செயல்படுகின்றன. இவை இறக்குமதி செய்யப்படும் கழிவுகளில் இருந்து, தங்கம், தாமிரம், அலுமினியம் உள்ளிட்ட பல உலோகங்களை பிரித்தெடுக்கின்றன.பாகிஸ்தானிலேயே ஆண்டுக்கு, ௩,௦௦௦ கோடி கிலோ கழிவுகள் உற்பத்தியாகின்றன. இத்துடன் எட்டு கோடி கிலோ கழிவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.


latest tamil newsஇதனால், பாகிஸ்தான் சர்வதேச குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கழிவுகளில், ௯௦ சதவீதம் கடலில் கலக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் அரபிக்கடல் மாசடைந்துள்ளது. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலை தொடர்ந்தால், பாகிஸ்தானில் சுற்றுச்சூழல் சீரழிந்து, யாரும் வாழ முடியாத நிலை ஏற்படும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyan Balachandran - Chennai,இந்தியா
03-ஜூலை-202220:54:53 IST Report Abuse
Subramaniyan Balachandran குப்பை கிடங்கு தான் பாகிஸ்தான். உழைத்து பிழைக்காமல் திருடியும், கொள்ளை அடித்தும், பிச்சை எடுத்தும் வாழும் தீவிரவாத தொட்டில் தான் அந்த நாடு. அமெரிக்காக்காரன் கடந்த 75 ஆண்டுகளாக போட்டுவந்த தொடர்பிச்சை, பின் லேடன் ரகசியம் அம்பலமானபின்னர் சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு விட்டது . இனிமேல் பிச்சை போடுவாரில்லை . கிடைத்த பிச்சைக்காசில் நாட்டுப்பொருளாதாரத்தை உயர்த்த உற்பத்தி பெருக்கத்தில் கவனம் செலுத்தாமல், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை வளர்த்துவிட்ட பாகிஸ்தான் இன்னமும் இரண்டு ஆண்டுகளில் நாலு துண்டுகளாக உடைந்து அழியும் .
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
03-ஜூலை-202218:52:13 IST Report Abuse
r.sundaram மிகவும் நல்லது. இந்த நவீன உலகத்தில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருப்பதே கேவலம். அந்த நாடு அறிந்ததெல்லாம் தீவிரவாதம் மட்டுமே. ஆதலால் அன்த நாடு அழிவதை பற்றி யாரும் கவலைப்பட போவதில்லை, சந்தோஷப்படலாம்.
Rate this:
Cancel
03-ஜூலை-202213:43:21 IST Report Abuse
ஆரூர் ரங் உலகிலேயே மதத்தின் அடிப்படையில் உருவான ஒரே நாடு. குப்பைக்😉 கலாச்சாரம் வேறு. அங்கு குப்பைகளைக் கொட்டாமல் தங்கம் வெள்ளியையா கொட்டுவாங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X