ரயில் நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரத்துக்கு அனுமதி

Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
சென்னை : ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில், தனியார் நிறுவன பெயர்கள் அல்லது 'லோகோ' பயன்படுத்தி, விளம்பரங்கள் செய்ய அனுமதி தரும் திட்டத்தை, ரயில்வே செயல்படுத்த உள்ளது.ரயில்வேயில் கட்டண உயர்வு இன்றி, இதர வழிகளில் வருமானத்தை பெருக்கும் வகையில், பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.ரயில்வேக்கு சொந்தமான இடங்கள், ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள்,



சென்னை : ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில், தனியார் நிறுவன பெயர்கள் அல்லது 'லோகோ' பயன்படுத்தி, விளம்பரங்கள் செய்ய அனுமதி தரும் திட்டத்தை, ரயில்வே செயல்படுத்த உள்ளது.


ரயில்வேயில் கட்டண உயர்வு இன்றி, இதர வழிகளில் வருமானத்தை பெருக்கும் வகையில், பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.ரயில்வேக்கு சொந்தமான இடங்கள், ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள், டிக்கெட்டுகளில் தனியார், பொதுத்துறை நிறுவனங்களின் விளம்பரங்கள் வெளியீடு; காலி இடங்களை பெரிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவது போன்ற திட்டங்களால், வருவாயை பெருக்கும் முயற்சியில் ரயில்வே ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, 'கோ - பிராண்ட் ஆப் ரயில்வே ஸ்டேஷன்' என்ற திட்டத்துக்கு, ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ரயில் நிலையங்களின் பெயர் பலகையில் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் பெயரில் இரண்டு வார்த்தைகள் அல்லது லோகோவை சேர்க்கலாம்.அதாவது, ரயில் நிலையத்தின் பெயரின் முன் பகுதியிலோ அல்லது பின் பகுதியிலோ சேர்க்கலாம்.
சிகரெட், புகையிலை, மது விற்பனை நிறுவனங்கள், இதில் பங்கேற்க முடியாது. 'டெண்டர்' வாயிலாக தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு அனுமதி தரப்படும்.இந்த திட்டம், முதன்முயற்சியாக மேற்கு ரயில்வேயில் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நல்ல வருவாய் கிடைத்து வருவதால், அடுத்தகட்டமாக மற்ற கோட்டங்களில் விரிவாக்கம் செய்ய, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
செலவு இன்றி வருமானம் பெருக்கும் முயற்சியில், ரயில்வே தனி கவனம் செலுத்தி வருகிறது. ரயில் நிலையங்கள், ரயில்கள், டிக்கெட்டுகள் போன்ற வாய்ப்புள்ள இடங்களில் விளம்பரங்களை இடம் பெறச் செய்து, வருவாயை பெருக்கி வருகிறோம்.நீண்ட காலத்துக்கு விளம்பரம் செய்வோருக்கு கட்டண சலுகையும் அளிக்கிறோம்.அடுத்த கட்டமாக, ரயில் நிலையங்களின் பெயர் பலகையில், விளம்பரம் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற விளம்பரங்களை காட்டிலும், இதற்கு நிறுவனங்கள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகள், கணினி நிறுவனங்கள், ஜவுளி, நகைக் கடைகள், உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை, நிபந்தனைக்கு உட்பட்டு விளம்பரங்கள் செய்ய, வழிவகை செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில், முதல் கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X