தற்காலிக ஆசிரியர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கோவை : அரசு பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கோவை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பள்ளிகளில் 2022- 23 ம் கல்வியாண்டில், 2022, ஜூன் 1 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில்,
தற்காலிக, ஆசிரியர்,  பணி,  விண்ணப்பம்,


கோவை : அரசு பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கோவை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பள்ளிகளில் 2022- 23 ம் கல்வியாண்டில், 2022, ஜூன் 1 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


latest tamil newsதகுதியான விண்ணப்பதாரர்கள், எழுத்து மூலமாக விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ, உரிய கல்வி சான்றுகளுடன், தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். காலிப்பணியிட விவரங்கள், முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, வட்டார கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் இன்று வெளியிடப்படுகிறது.

விண்ணப்பிக்க வரும் 6 ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பங்களை, கோவை, பேரூர், சர்க்கார் சாமகுளம், பொள்ளாச்சி ஆகிய கல்வி மாவட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
03-ஜூலை-202211:42:54 IST Report Abuse
mohan அன்பு என்பது, நாம் முதலில் என்ன பேசுகிறோம் என்பதை பொறுத்தது..இந்த உலகத்தில் யார் உண்மையை புரிந்து கொண்டு , அருகில் சென்று, என்ன வேலை பளு இருக்கிறதோ, அதற்கேற்ற வாறு, தன்னுடைய சிரமங்களையும், உடனடி தேவையையும் தெரிய படுத்தலாம்...நாமாக , நம்மை கவனிக்க வில்லை என்று அடுத்தவரிடம் கோபப்படுவது, நீண்ட கால குடும்ப வளர்ச்சியை பாதிக்கும்...இந்த கலியுக காலத்தில் நாமாக நம் வேலை திட்டங்களை வகுத்தால் தான் உண்டு..அடுத்தவரிடம் கலந்தாலோசித்தால், நமக்கு தீயதை விளைவித்து, அவர்கள் பணம் திரட்ட முயல்வர்..இது உலகத்தில் உள்ள தனி பிரிவு...உலகத்தின் தனி நபர் வெற்றி என்பது, நமக்கு, நம் வேலை பளுவை குறைத்து, திட்ட மிடுவதை அதிகப்படுத்துவது....இது தான் எல்லா வெற்றியாளர்களை கடை பிடிப்பது....மற்ற படி அன்பு என்பது என் மாதிரி ஆட்களிடம் திகமாகவே உள்ளது..அதை புரிந்து கொள்வது கடினம்....
Rate this:
03-ஜூலை-202212:52:27 IST Report Abuse
SUBBU,MADURAI நீங்க இந்த உலகத்துக்கு சுற்றி வளைத்து என்னமோ சொல்ல வர்றீங்கன்னு தெரியுது.ஆனா அது என்னவென்றுதான் புரிய மாட்டேங்குது....
Rate this:
Gopinathan S - chennai,இந்தியா
03-ஜூலை-202217:57:24 IST Report Abuse
Gopinathan Sஇவர் கமல்ஹாசனின் ரசிகராக இருக்க கூடும்....
Rate this:
Madurai Ravi - Tamilnadu,இந்தியா
03-ஜூலை-202222:29:24 IST Report Abuse
Madurai Raviஅவர் பரமக்குடி நடிகரின் ரசிகனாக இருக்கும். அதான் அவர் சொல்ல வர்றது புரிய மாட்டேங்குது.......
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
03-ஜூலை-202210:25:05 IST Report Abuse
Rajarajan அரசின் தற்காலிக வேலை என்றால், ஊழியருக்கு, தொழிற் சங்கங்கள், ஜாதி கட்சிகள் மற்றும் சிவப்பு சட்டைகளுக்கு உப்பு சப்பு இருக்காதே அரசை தொடர்ந்து மிரட்டி, கஜானாவை தூர் வார முடியாதே அதுசரி, இதை எதிர்க்கும் அரசு ஊழியர் / திராவிட அனுதாபிகள் மட்டும் எப்படி தங்கள் வாரிசுகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் ?? ஒருவேளை பணியில் சேர்ந்துவிட்டு, பின்னர் போராட்டம் நடத்தினால் அரசு பணியுமா ?? தெளிவான விளக்கம் கிடைக்குமா ?? இதே போல, பெரும்பாலான தமிழக அரசு பணிகள், தனியார் மூலம் நிறைவேற்றப்படுமா ? இது முன்னோட்டம் தானா ?? எப்படியோ, தமிழக அரசின் நிதி நிலைமை இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
Rate this:
Cancel
03-ஜூலை-202209:27:43 IST Report Abuse
ஆரூர் ரங் அக்னிபத்தில் தாற்காலிக நியமனங்கள் கூடாது. ஆனா அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் வேலைக்கு தாற்காலிகப் பணி நியமனம். நல்லாயிருக்கு உங்க நியாயம்..TET தேர்வு தகுதி காலவரையறை முடிந்து விட்டால் மீண்டும் அவர்கள் TET எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்குள் நிரந்தரமான பணி கிடைக்க வேண்டும். ஆனால் விடியாத அரசு வசூலிக்கவென்று 😉தாற்காலிக நியமனங்கள் செய்கிறது. பிறகு பணி நீட்டிப்பு க்கு ஒரு வசூல். நிரந்தரமாக்க🙃 அடுத்த வசூல். அதற்குப் பிறகு இடமாற்றத்தை அடிக்கடி வசூல். ஓட்டுப் போட்டத்திற்கு அனுபவியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X