மயிலாடுதுறையில் தலைகீழாக நின்று போராட்டம்

Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைகீழாக நின்று கவனயீர்ப்பு போராட்டம் நடந்தது.- நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டத்தில் பத்துக்கு மேற்பட்டோர் தலைகீழாக நின்று கண்டனத்தை பதிவு செய்தனர்.மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று காலை 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலையம்
மயிலாடுதுறையில் தலைகீழாக நின்று போராட்டம்


மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைகீழாக நின்று கவனயீர்ப்பு போராட்டம் நடந்தது.- நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டத்தில் பத்துக்கு மேற்பட்டோர் தலைகீழாக நின்று கண்டனத்தை பதிவு செய்தனர்.
மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று காலை 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலையம் முன்பு தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழன் கணேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ரயில் பயணிகள் சங்கம், மயிலாடுதுறை வர்த்தக சங்கம், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில், 10 ஆண்டுகளாக இணைக்கப்படாத திருவாரூர் அகல ரயில் பாதையை மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் அனைத்து வழித்தடத்தோடும் இணைத்திட வேண்டும், மயிலாடுதுறை திருச்சி விரைவு வண்டியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும், மயிலாடுதுறை திருநெல்வேலி பாசஞ்சர் வண்டியை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கும் முடிவை கைவிட்டு திருநெல்வேலி வரை இயக்க வேண்டும், மயிலாடுதுறை பெங்களூர் பாசஞ்சர் வண்டியை மீண்டும் உடனே இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் தலைகீழாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriniv - India,இந்தியா
03-ஜூலை-202219:55:58 IST Report Abuse
Sriniv தற்போது பெங்களூருவில் இருந்து மாயவரத்திற்கு ஒரே ஒரு ரயில் தான். அதுவும் சீக்கிரம் full ஆகிறது. இன்னும் ஒரு லேட் நைட் ரயில் கண்டிப்பாக்க வேண்டும். பெங்களூரில் இருந்து சுமார் 10 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு மாயவரம் சென்று அடையும் படி செய்தல் மிக அவசியம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-ஜூலை-202213:51:56 IST Report Abuse
Ramesh Sargam நியாயமான கோரிக்கைகள். ரயில்வே நிர்வாகம் உடனே அவர்கள் கோரிக்கையை ஏற்று ஆவண செய்திட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X