கடமான் வேட்டை: துப்பாக்கியுடன் 4 பேர் கைது

Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பால்மேடு சுற்று பகுதியில், வன விலங்கு வேட்டையில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார், கடந்த சில வாரங்களாக விசாரணை நடத்தி வந்தனர். நேற்று நள்ளிரவு பாண்டியாறு-புண்ணியம்புழா ஆற்றின் கரையோர
 கடமான் வேட்டை: துப்பாக்கியுடன் 4 பேர் கைது

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பால்மேடு சுற்று பகுதியில், வன விலங்கு வேட்டையில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார், கடந்த சில வாரங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று நள்ளிரவு பாண்டியாறு-புண்ணியம்புழா ஆற்றின் கரையோர வனப்பகுதியில்,சிலர் துப்பாக்கியுடன் நடமாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர் ஆய்வில், பால்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் தலைமையிலான, வேட்டை கும்பல், கடமானை வேட்டையாடி இவரின் வீட்டிற்குள் வைத்திருப்பது தெரியவந்தது.

போலீசார் வீட்டிற்குள் பதுங்கியிருந்த பாலகிருஷ்ணன்(38), பெரிய சூண்டியை சேர்ந்த மைக்கேல் (30), புஷ்பராஜ் (33), அருண் (26) ஆகியோரை கைது செய்து, நாட்டு துப்பாக்கி,7 தோட்டாக்கள், 2 கத்திகள், 4 ஹெட்லைட்கள், 50 கிலோ கடமான் இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தேவாலா போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
04-ஜூலை-202203:29:38 IST Report Abuse
Sanny அதனால் என்ன? சல்மான்கானின் வக்கிலை பிடித்தால் வெளியில் வந்துடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X