விந்து முந்துதல்; காரணமும் தீர்வும்

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
இன்றைய நவநாகரிக யுகத்தில் நமது துரித உணவு கலாசாரம், வாகன மற்றும் தொழிற்சாலை புகையால் ஏற்படும் காற்று மாசு, மது, புகை உள்ளிட்ட தனிநபர் பழக்கங்கள் ஆகியவற்றால் நாள்தோறும் பல்வேறு உடல் உபாதைகள் உண்டாகின்றன. இவற்றில் முதன்மையானது ஆண்களுக்கான பாலியல் பிரச்னைகள். திருமணமான ஆண்கள் பலர் தங்களது அன்றாட வாழ்வில் சந்திக்கும் முக்கிய பிரச்னை விந்து முந்துதல். இதற்கு
விந்து முந்துதல், விந்து முந்துதல் தீர்வு, உடலுறவு பிரச்னைகள், Premature Ejaculation, sex problems, sex life, men sex problems

இன்றைய நவநாகரிக யுகத்தில் நமது துரித உணவு கலாசாரம், வாகன மற்றும் தொழிற்சாலை புகையால் ஏற்படும் காற்று மாசு, மது, புகை உள்ளிட்ட தனிநபர் பழக்கங்கள் ஆகியவற்றால் நாள்தோறும் பல்வேறு உடல் உபாதைகள் உண்டாகின்றன. இவற்றில் முதன்மையானது ஆண்களுக்கான பாலியல் பிரச்னைகள். திருமணமான ஆண்கள் பலர் தங்களது அன்றாட வாழ்வில் சந்திக்கும் முக்கிய பிரச்னை விந்து முந்துதல். இதற்கு உடலளவிலும் மனதளவிலும் பல காரணங்கள் உள்ளன. விந்து முந்துதல் எதனால் ஏற்படுகிறது, இதனை தடுக்க ஏற்ற வழிகள் என்னென்ன என ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாகக் பார்ப்போம்.


latest tamil news
*உடலுறவின் முடிவில் ஆண்கள் விந்துவை பெண்ணுறுப்பின் உள் வெளியேற்றுவர். இன்றைய வாழ்க்கைமுறை காரணமாக நீடித்த உறவு என்பது கனவாகிப்போன ஆண்களே நம் நாட்டில் அதிகம். இந்திய ஆண்கள் சராசரியாக ஐந்து நிமிடங்களில் விந்துவை வெளியேற்றுவதாக பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கு இயங்கும் நேரம் ஐந்து நிமிடத்தில் இருந்து குறைந்து சில விநாடிகளாக மாறுவது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்னையே விந்து முந்துதல் எனப்படுகிறது.

*விந்து சீக்கிரம் வெளியேற குறிப்பிட்டு ஒரு காரணத்தைச் சொல்ல இயலாது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

*சிறு உராய்வு மூலமாகவே விறைப்புத்தன்மை ஏற்படும் அதிக உணர்ச்சியுள்ள ஆணுறுப்பு கொண்ட கொண்ட ஆண்களுக்கு விந்து சீக்கிரம் வெளியேறலாம்.

*விறைப்புத்தன்மை குறைவு(erectile dysfunction) காரணமாக விந்து முந்துதல் ஏற்படலாம்.

*எல்ஹெச் ஹார்மோன் (luteinizing hormone), புரொலாக்டின் (prolactin), டிஎஸ்ஹெச் ஹார்மோன் (thyroid stimulating hormone) குறைபாட்டால் ஏற்படலாம்.

*மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் செராட்டினான், டோபொமைன் ஆகிய ரசாயனங்கள் உடலுறவின்போது உணர்ச்சியைத் தூண்டிவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மன அழுத்தம், வேலை பளு காரணமாக இவை குறைவாக சுரக்க வாய்ப்புள்ளது. இதனால் விந்து முந்துதல் ஏற்படலாம்.

*'பெர்ஃபாமென்ஸ் ஆங்சைட்டி' எனப்படும் புதிய விஷயத்தை நீண்ட நாள் கழித்து செய்யும்போது ஏற்படும் பதற்றம் காரணமாகவும் விந்து முந்துதல் உண்டாகலாம். அலுவலகத்தில் தெரியாத வேலையை முதன்முறை செய்யும்போது, தேர்வு எழுதும்போது கூட இந்த வகை பதற்றம் உண்டாவதை பலர் உணர்ந்திருப்பர்.


latest tamil news*துணையுடன் கருத்து மோதல், பொருளாதார பிரச்னைகள் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளால் ஏற்படலாம்.

*பாலியல் விஷயத்தில் எப்போதாவது அவமானத்தை சந்தித்தவர்களுக்கு விந்து முந்துதல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

*உடல்சார்ந்த பிரச்னைகளுக்கு பாலியல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. ஹார்மோன்களை அதிகரிக்க மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

*மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு நமது அணுகுமுறை, வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளுதல், மன மகிழ்ச்சி ஆகியவையே தீர்வு. இவற்றை ஏற்படுத்த உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் மாற்றி அமைப்பதுதான் ஒரே வழி.

*உடலுறவு என்பது காலை பல் துலக்குவது, குளிப்பது, சாப்பிடுவது போன்று ஒரு வேலையாக நினைத்து கடமைக்குச் செய்வது தவறு. இது விந்து முந்துதல் மட்டுமின்றி நாளடைவில் ஆண்களுக்கு இல்லறம் மீதான நம்பிக்கையை முழுவதுமாக அழித்துவிடும் என்பதை கவனத்தில் கொள்க.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X