வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்:ஒவ்வொரு மாநிலத்திலும் இரட்டை எஞ்சின் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது அதிகரித்து வருகிறது. தெலங்கானாவிலும் இரட்டை எஞ்சின் ஆட்சிக்கு மக்கள் வழிவகுத்து வருகின்றனர். என பிரதமர் கூறினார்.
![]()
|
தெலங்கானா மக்கள் கடின உழைப்புக்கு புகழ்பெற்றவர்கள். மாநில மக்களிடம் திறமைகள் அதிகம். அதன் வரலாறு மற்றும் கலாச்சாரம் பெயர் போனது.கலை மற்றும் கட்டடக்கலை நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விசயம். ஐதராபாத் நகரம் திறமையாளரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நகரம். அதே போல் பா.ஜ.,வும் நாட்டின் நம்பிக்கைகளை மற்றும் அபிலாஷை களை நிறைவேற்ற இரவும் பகலும் கடுமையாக உழைத்து வருகிறது. கோவிட் காலத்தில் இலவச தடுப்பூசி மற்றும் இலவச உணவுகள் வழங்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியர்களின் வாழ்க்கை தரம் நேர்மறையாக மாறி உள்ளது. வளர்ச்சியின் பலன்கள் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைவதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தெலங்கானாவின் வளர்ச்சியே எங்கள் நோக்கம் மத்திய அரசின் திட்டங்களால் தெலங்கானா மக்கள் ஒவ்வொருவரும் பலன் அடைந்து வருகின்றனர். மாநிலத்தின் அனைத்த தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.
பா.ஜ.,வை மக்கள் எந்தளவிற்கு விரும்புகிறார்கள் என்பது உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. பா.ஜ.,ஆட்சியில் உள்ள மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. தெலங்கானாவிலும் அது நடக்கும். வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. அவர்களை வங்கி அமைப்பில் இணைத்ததால் அது சாத்தியமானது. மாநிலத்தில் ஏழை சகோதரிகளுக்கு பல்வேறு சலுகைகளை பா.ஜ., அளித்து வருகிறது. மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 5 ஆயிரம் கி.மீ ஆக அதிகரித்துள்ளது.
![]()
|
இரட்டை எஞ்சின் ஆட்சிக்கு மக்கள் விருப்பம்
ஒவ்வொரு மாநிலத்திலும் இரட்டை எஞ்சின் ஆட்சிமீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது அதிகரித்து வருகிறது. தெலங்கானாவிலும் இரட்டை எஞ்சின் ஆட்சிக்கு மக்கள் வழிவகுத்து வருகின்றனர். என பிரதமர் கூறினார்.