வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: வாழ்விழந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். அவர்களை பா.ஜ.,கேலி செய்ய கூடாது. அதற்கு பதிலாக அவர்களிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
![]()
|
தெலங்கானா மாநிலம் ஐ தராபாத் நகரில் நடைபெற்ற பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: தங்கள் இருப்புக்காக போராடி வரும் பல்வேறு கட்சிகளை பார்த்து நாம் சிரிக்கவோ கேலி செய்யவோ கூடாது. அதற்கு பதிலாக நாம் அவர்களிடம் இருந்து பாடத்தை கற்று கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் செய்த தவறுகளை போன்று செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்க வேண்டும். வாரிசு அரசியல் மற்றும் குடும்ப அரசியலால் மக்கள் சலிப்பு அடைந்துள்ளனர்.
தெலங்கானா, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் கட்சித்தொண்டர்கள் துணிச்சலுடன் போராடி வருகின்றனர். அவர்களின்செயல் பெருமை கொள்கிறது.
![]()
|
கிராமப்புறங்களிலும் கவனம்
நாங்கள் தொழில்நுட்பத்தி் மட்டும் கவனம் செலுத்தாமல் கிராமப்புற பிரச்னைகளிலும் கவனம் செலுத்துகிறோம். ஐ தராபாத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் கட்டப்படும் ஏழு ஜவுளி பூங்காக்களில் ஒன்று தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்படும். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் இரட்டிப்பாகி உள்ளன. 31 ஆயிரம் கோடி ரூபாயில் ரயில்வே துறை வளர்ச்சி அடைந்துள்ளது. என பிரதமர் குறிப்பிட்டார்.