கும்மிருட்டில் சுரங்க நடைபாதை:பெண் பாதசாரிகள் அச்சம்

Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சைதாப்பேட்டை:சைதாப்பேட்டை, சுரங்க நடைபாதை மின் விளக்குகள் எரியாமல் கும்மிருட்டாக மாறியுள்ளது. இதனால், பெண் பாதசாரிகள், முதியோர், சிறுவர்கள் பீதியில் நடக்கின்றனர்.சென்னையின் முக்கிய பகுதியாக சைதாப்பேட்டை உள்ளது. சாலையை கடக்க, ஒரு சுரங்க நடைபாதை உள்ளது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்லும் பயணியர், இந்த சுரங்க நடைபாதையை பயன்படுத்துகின்றனர்.சுரங்க நடைபாதையில்
கும்மிருட்டில் சுரங்க நடைபாதை:பெண் பாதசாரிகள் அச்சம்

சைதாப்பேட்டை:சைதாப்பேட்டை, சுரங்க நடைபாதை மின் விளக்குகள் எரியாமல் கும்மிருட்டாக மாறியுள்ளது. இதனால், பெண் பாதசாரிகள், முதியோர், சிறுவர்கள் பீதியில் நடக்கின்றனர்.
சென்னையின் முக்கிய பகுதியாக சைதாப்பேட்டை உள்ளது. சாலையை கடக்க, ஒரு சுரங்க நடைபாதை உள்ளது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்லும் பயணியர், இந்த சுரங்க நடைபாதையை பயன்படுத்துகின்றனர்.சுரங்க நடைபாதையில் மின்விளக்கு எரியாமல் இருளில் மூழ்கி உள்ளது. பகலில், மின்விளக்கு எரிந்தால் தான் செல்ல முடியும்.
இருள் சூழ்ந்து உள்ளதால், பாதசாரிகள் சுரங்க நடைபாதையை பயன்படுத்த அச்சப் படுகின்றனர். அதுவும், பெண் பாதசாரிகள் வழிப்பறி, சீண்டல் போன்ற சம்பவங்கள் நடைபெறும் என்ற அச்சத்தில், சுரங்க நடைபாதையை தவிர்க்கின்றனர்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சில நபர்கள், அடிக்கடி விளக்குகளை சேதப்படுத்துவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க சுரங்கப்பாதையில் கண்காணிப்பு கேமரா அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
04-ஜூலை-202212:32:44 IST Report Abuse
jayvee சென்னையில் உள்ள பல பாதசாரி n சுரங்கபாதைகள் இரவில் பாலியல் கூடமாகவும், சாலையோர வியாபாரிகளின் போர்டுகள் வைக்கும் இடமாகவும் பயன்படுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X