அமர்நாத்தில் மிகப் பெரிய தாக்குதல் சதித்திட்டம் தவிர்ப்பு! பிடித்து கொடுத்த மக்களுக்கு பரிசு அறிவிப்பு | Dinamalar

அமர்நாத்தில் மிகப் பெரிய தாக்குதல் சதித்திட்டம் தவிர்ப்பு! பிடித்து கொடுத்த மக்களுக்கு பரிசு அறிவிப்பு

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (9) | |
ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளை, கிராம மக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இவர்கள் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும், அமர்நாத் யாத்திரையில் மிகப் பெரிய தாக்குதல் நடத்தி, சீர்குலைக்க திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. சரியான நேரத்தில் இவர்கள் பிடிபட்டதால், மிகப் பெரிய தாக்குதலுக்கான சதித்
அமர்நாத்தில்  மிகப் பெரிய தாக்குதல் சதித்திட்டம் தவிர்ப்பு! பிடித்து கொடுத்த மக்களுக்கு பரிசு அறிவிப்பு

ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளை, கிராம மக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இவர்கள் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும், அமர்நாத் யாத்திரையில் மிகப் பெரிய தாக்குதல் நடத்தி, சீர்குலைக்க திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.

சரியான நேரத்தில் இவர்கள் பிடிபட்டதால், மிகப் பெரிய தாக்குதலுக்கான சதித் திட்டம் தவிர்க்கப்பட்டது. இவர்களை பிடித்து கொடுத்த கிராம மக்களுக்கு, கவர்னர் மனோஜ் சின்ஹா,
5 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.
ஜம்மு- - காஷ்மீரின் ரியாசி மாவட்டம், துக்சன் தாக் என்ற கிராமத்தில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு பேர் பதுங்கியிருந்தனர்.அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்து போலீசில்ஒப்படைத்தனர்.


வெடிபொருட்கள்

அவர்கள் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பைசல் அஹமது தார், தலிப் ஹுசைன் என்பதும், ரஜவுரி மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் தெற்கு காஷ்மீரில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இருவரிடம் இருந்தும் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து, ஜம்மு - காஷ்மீரின் ஏ.டி.ஜி.பி., முகேஷ் சிங் கூறியதாவது:இந்த இரு பயங்கரவாதிகளும் கடந்த சில நாட்களாக பதுங்கி இருந்தனர். பாதுகாப்பு படையினரின் ரோந்து அதிகரித்துள்ளதை அடுத்து, பிடிபட்டு விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டு, துக்சன் தாக் கிராமத்தில் பதுங்கிஇருந்துள்ளனர்.
ரஜவுரி மாவட்டத்தில் நடந்த மூன்று மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதலை, தலிப் ஹுசைன் நிகழ்த்தி உள்ளார்; கையெறி குண்டு வீசி, ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமாக இருந்துள்ளார்.
தற்போது நடந்து வரும் அமர்நாத் பனிலிங்க புனித யாத்திரையில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தி சீர்குலைக்க, இவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு, தலிப் ஹுசைன் மூளையாகச் செயல்பட்டுள்ளார்.பாகிஸ்தானில் இருந்து ஐ.இ.டி., எனப்படும் சக்தி வாய்ந்த வெடி குண்டுகள்மற்றும் ஆயுதங்கள் இவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாகவும் இவர்களுக்கு ஆயுதங்கள் 'சப்ளை' செய்யப்பட்டு உள்ளன.


கூட்டாளிகள்

இவர்கள் கைவசம் உள்ள ஆயுதக் குவியல்களை பார்க்கும் போது, ஜம்மு - காஷ்மீரில் இவர்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியது தெளிவாகிறது.தலிப் ஹுசைனின் கூட்டாளிகள் இருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இவர்கள் இருவரையும் தேடி வந்தோம்.
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் பயங்கரவாதி குவாசிம் உடன், தலிப் ஹுசைன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும், பாக்.,கைச் சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதி சல்மானுடன்இவர்கள் இருவரும் தொடர்பில் இருந்துஉள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாதிகள் இருவரையும் துணிச்சலுடன்பிடித்துக் கொடுத்த துக்சன் தாக் கிராம மக்களை, ஜம்மு - காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா, டி.ஜி.பி., தில்பாக்சிங் ஆகியோர் பாராட்டினர். மேலும், கவர்னர் 5 லட்சம் ரூபாயும், டி.ஜி.பி., 2 லட்சம் ரூபாயும் கிராம மக்களுக்கு பரிசு அறிவித்துள்ளனர்.பிடிபட்ட பயங்கரவாதி தலிப் ஹுசைன், செய்தி இணையதளம் ஒன்றை நடத்தி வருவது தெரிய வந்தது.

இவர், ஜம்மு - காஷ்மீர் பா.ஜ., தலைவர் ரவீந்திர ரெய்னா உட்பட பல்வேறு பா.ஜ., தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளராக இவர் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது; இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஜம்மு - காஷ்மீர் பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பதானியா கூறியதாவது: இந்த கைதின் வாயிலாக நமக்கு மிகப் பெரிய படிப்பினை கிடைத்துள்ளது.பின்னணியை ஆய்வு செய்யாமல், 'ஆன்லைன்' வாயிலாக உறுப்பினர்களை சேர்க்கும் நடைமுறையை முதலில் நிறுத்த வேண்டும்.இல்லை எனில், பாக்., பயங்கரவாதிகள் கட்சிக்குள் ஊடுருவி குழப்பம் விளைவிக்கக் கூடும். இவர்கள், தலைவர்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களை கொல்லவும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X