தமிழ்நாடு தின இலக்கியப் போட்டி:மாணவர்களுக்கு அழைப்பு

Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
உடுமலை:மாவட்ட அளவிலான இலக்கியப்போட்டியில் பங்கேற்க, பள்ளி மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுமென, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மாணவ, மாணவியருக்கு, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.தமிழ்நாடு நாளை முன்னிட்டு, திருப்பூர் ஜெய்வாபாய்

உடுமலை:மாவட்ட அளவிலான இலக்கியப்போட்டியில் பங்கேற்க, பள்ளி மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுமென, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மாணவ, மாணவியருக்கு, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.தமிழ்நாடு நாளை முன்னிட்டு, திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில், 5ம் தேதி கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடக்கிறது.

போட்டியில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.பள்ளித்தலைமையாசிரியர் பரிந்துரை கடிதம் பெற்று வந்து, மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். ஒரு பள்ளியில் இருந்து, ஒரு போட்டிக்கு, இரு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும், போராட்டங்களும், தமிழ்நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாகிகள், அண்ணாதுரை பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம் உட்பட பல தலைப்புகளில் போட்டிகள் நடக்கும்.போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெறும் பள்ளி மாணவருக்கு, மாவட்ட அளவில், முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக, 5,000 என்ற வகையில் வழங்கப்படும். போட்டிகள் நடத்திய அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். போட்டிகளில் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X