எக்ஸ்குளுசிவ் செய்தி

வலிமையான ஐந்து ஆண்டுகள்!

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
சரக்கு மற்றும் சேவை வரி, நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2003ம் ஆண்டு, முதன் முதலில், கேல்கர் பணிக்குழு அளித்த அறிக்கையில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, அதிலிருந்து இதை செயல்படுத்துவதற்கு, 13 ஆண்டுகள் தேவைப்பட்டது.கடந்த 2017 முதல் ஆரம்ப கால பிரச்னைகளை ஜி.எஸ்.டி., சந்தித்தது. எனினும், துவக்க கால பிரச்னைகளை விட, கொரோனா
வலிமையான ஐந்து ஆண்டுகள்!

சரக்கு மற்றும் சேவை வரி, நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2003ம் ஆண்டு, முதன் முதலில், கேல்கர் பணிக்குழு அளித்த அறிக்கையில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, அதிலிருந்து இதை செயல்படுத்துவதற்கு, 13 ஆண்டுகள் தேவைப்பட்டது.
கடந்த 2017 முதல் ஆரம்ப கால பிரச்னைகளை ஜி.எஸ்.டி., சந்தித்தது. எனினும், துவக்க கால பிரச்னைகளை விட, கொரோனா பெருந்தொற்று மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது.ஜி.எஸ்.டி., கவுன்சில் உதவியுடன் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து இந்த நெருக்கடி நிலையை எதிர்கொண்டன.
நம் பொருளாதாரத்தையும் மீட்டெடுத்துள்ளன. இணைந்து செயல்பட்டதால் தான், பலரும் கணித்தவாறு, இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக தற்போது திகழ்கிறது.கடந்த 2017ல் இந்தியாவில் அறிமுகம் ஆகும் முன், ஏராளமான நாடுகள் ஜி.எஸ்.டி.,யை தங்கள் நாடுகளில் அறிமுகம் செய்திருந்தன.
ஆனால், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கட்டமைப்பே, இந்தியாவின் தனித்துவமானது.மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டும் சுதந்திரமான வரி விதிப்பு அதிகாரங்களை அனுபவித்து வந்த இந்திய அரசியலின் அரை- கூட்டாட்சி இயல்பு, ஒரு தனித்துவமான தீர்வைக் கோரியது.வெவ்வேறு அளவுகள் மற்றும் வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளில் உள்ள மாநிலங்களின் வரி அமைப்பு முறையை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர வேண்டிஇருந்தது.


எதிர்பார்ப்பு


வரி வசூலுக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் மாநிலங்கள் வேறுபட்ட நிலையில் இருந்தன. இது போன்ற தேவைகளுக்குத் தீர்வு காண்பதில், நிறுவன அமைப்பான ஜி.எஸ்.டி., கவுன்சிலும், இந்தியாவின் பிரத்யேகமான ஜி.எஸ்.டி., தீர்வு அமைப்பும் விடையாகத் திகழ்ந்தன. ஒரு சில விதிவிலக்குகளுடன், மத்திய மற்றும் மாநிலங்களின் வரிகள், ஜி.எஸ்.டி.,யில் இணைக்கப்பட்டன.
17 வெவ்வேறு சட்டங்கள் இணைக்கப்பட்டு, ஜி.எஸ்.டி., மூலம் ஒரே வரி அமைப்பு முறை கொண்டு வரப்பட்டது.இந்தியாவைப் பொறுத்தவரை வரி வீதங்கள், விலக்குகள், வர்த்தக நடைமுறைகள் மற்றும் உள்ளீட்டு வரிக்கடனின் இயக்கம் உள்ளிட்ட ஜி.எஸ்.டி.,யின் முக்கிய விஷயங்களுக்கு, தேசிய அளவிலான தீர்வு காண்பதில், ஜி.எஸ்.டி., கவுன்சில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஜூலை 2017-ல் வரி செலுத்துவோரில், 63.9 லட்சம் பேர் ஜி.எஸ்.டி.,க்கு மாறினர். 2022 ஜூன் நிலவரப்படி இந்த எண்ணிக்கை, இரண்டு மடங்கிற்கும் மேலாக, 1.38 கோடி வரி செலுத்துவோராக அதிகரித்துள்ளது. மொத்தம் 41.53 லட்சத்திற்கும் அதிகமான வரி செலுத்துவோர் மற்றும் 67 ஆயிரம் பயணியர் 'இ--வே' தளத்தில் பதிவு செய்து, சராசரியாக மாதத்திற்கு, 7.81 கோடி 'இ--வே' ரசீதுகளை உருவாக்கினர்.
இந்த அமைப்பு முறை துவங்கப்பட்டது முதல், 292 கோடி இ--வே ரசீதுகள் ஈட்டப்பட்டுள்ளன. இதில், 42 சதவீதம், மாநிலங்களுக்கு உள்ளே சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கானதாகும்.இந்த ஆண்டு மே 31ம் தேதி ஒரே நாளில் மிக அதிகபட்சமாக, 31 லட்சத்து 56 ஆயிரத்து 13 இ- - வே ரசீதுகள் பெறப்பட்டன.கடந்த 2020- - 21ல் 1.04 லட்சம் கோடி ரூபாயாக இருந்த சராசரி மாதாந்திர வரி வசூல், 2021- - 22ல் 1.24 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.


15 சதவீதம்


இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், சராசரி வரி வசூல் 1.55 லட்சம் கோடி ரூபாயாகும். இது போன்ற நிலையான உயர்வு நிலவரம் தொடரும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு. சி.எஸ்.டி., 'வாட்' முறையின் கீழ், இந்திய மாநிலங்களிடையே நிலவி வந்த வரி நடுவர் முறையை ஜி.எஸ்.டி., நீக்கியுள்ளது.அப்போது இருந்த ஒரு ஊடுருவும் கட்டுப்பாட்டு அமைப்பு, எல்லை சோதனைச்சாவடிகள் மற்றும் சரக்குகள் ஏற்றப்பட்ட வண்டிகளை சரி பார்த்தல் ஆகியவை நேரத்தையும், எரிபொருளையும் வீணடித்தன.
இதன் விளைவாக, உள்நாட்டிற்குள்ளே சரக்குகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளுக்கான தளவாடச் சங்கிலியால் போதிய அளவையும், பலனையும் பெற முடியவில்லை. சரக்குகளின் விலையில் தளவாடங்களின் விலை 15 சதவீதம் என்று கணக்கிடப்பட்டது.ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் இது போன்ற விஷயங்கள் இல்லாததால், தளவாடங்களின் வினியோகச் சங்கிலி பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பல்வேறு வகையான வாகனங்களில் நாம் கவனம் செலுத்துவதாலும், பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் மூலமும் இதன் பயன்கள் பன்மடங்கு அதிகமாகும் என்பது திண்ணம். ஜி.எஸ்.டி., முறைக்கு முந்தைய காலத்தில் பெரும்பாலான பொருட்களின் மீது மத்திய மற்றும் மாநில வரிகள் இணைந்து, 31 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது.எனினும் ஜி.எஸ்.டி., முறையின் கீழ் 400 பொருட்கள் மற்றும் 80 சேவைகளின் விகிதங்கள் வெகுவாகக குறைக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக 28 சதவீத வரி விகிதம் ஆடம்பரப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. 28 சதவீத வரம்பில் இருந்து வந்த 230 பொருட்களுள் 200 பொருட்கள், குறைவான வரி வீதங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் தேவைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் வரி மற்றும் சுமை குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் தொடர்கிறது.
அதே வேளையில், உள்ளிட்டு வரி கடனுக்காக வினியோகச் சங்கிலியுடன் அது தொடர்ந்து ஒருங்கிணைவதை உறுதி செய்வதும் முக்கியமாக இருந்தது.இது குறித்து இரண்டு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொருட்களுக்கான அதிகபட்ச விலக்கு வரம்பை 20 லட்சம் ரூபாயில் இருந்து, 40 லட்சம் ரூபாயாக உயர்த்துதல் மற்றும் 89 சதவீத வரி செலுத்துவோர் பயனடையக் கூடிய, காலாண்டு வருமானம் மற்றும் மாதாந்திர கட்டணம் செலுத்துதல் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை பின்பற்றப்பட்டன.
துவக்கம் முதலே ஜி.எஸ்.டி.,யின் நிர்வாகம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், தானியங்கியாகவும் தொடர்கிறது.தளத்தை இயக்குவதற்கு தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும் தொழில்நுட்ப நிறுவனமான ஜி.எஸ்.டி., உருவாக்கம் சரியான திசையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.வன்பொருள் மற்றும் மென்பொருள் திறன்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்துவதன் மூலம் அமைப்பு முறை சீராக இயங்குகிறது.
சுங்கத்தால் தானியங்கி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., பணமீட்டமைப்பு மற்றும் ஜி.எஸ்.டி., அதிகாரிகளால் ஏற்றுமதியாளர்களுக்கு திரட்டப்பட்ட உள்ளீட்டு வரிக் கடன் மீண்டும் வழங்கப்படுதல் ஆகியவை, ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான உள்ளீட்டு வரிகளை நடுநிலையாக்குவதை தடையற்றதாகவும், தொந்தரவு இல்லாததாகவும் ஆக்கியுள்ளது.
ஜி.எஸ்.டி., விஷயங்களில் பெரும்பாலான வழக்குகள் உள்ளீட்டு வரிக்கடன், 'சம்மன்' அனுப்புதல், நபர்களை கைது செய்தல், மீட்டெடுப்பதற்காக சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற அம்சங்களில், ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரங்கள் போன்ற பிரச்னைகளை மையமாகக் கொண்டுள்ளன.
மோகித் மினரல்ஸ் நிறுவனத்திற்கு எதிரான இந்திய அரசின் வழக்கில், சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.டி.,யின் அடிப்படை அம்சங்களை புறம் தள்ளவோ, மாற்றியமைக்கவோ இல்லை.மேற்கு வங்கத்தின் நிதியமைச்சராக, 24 ஆண்டுகள் பதவி வகித்த அசிம் தாஸ் குப்தா, மாநில நிதி அமைச்சர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்டார்.
ஜி.எஸ்.டி., சட்டங்களின் முதல் வடிவமைப்பு, 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.ஜூலை 2, 2017 அன்று, ஓர் வர்த்தக நாளேட்டிற்கு அவர் அளித்த பேட்டியில், ஜி.எஸ்.டி.,யின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து பேசியிருந்தது, இது நாள் வரை ஏற்புடையதாக உள்ளது. அவர் கூறியிருந்ததாவது:
சேவை வரியை விதிப்பதற்கு மாநிலங்களுக்கு எப்போதும் அதிகாரம் இல்லை. வெறும் பங்கு பெற மட்டுமல்லாமல், சேவை வரியை விதிப்பதற்கும் அதிகாரம் அளிக்க, துவக்கம் முதலே மாநிலங்கள் கோரி வருகின்றன.ஜி.எஸ்.டி., மூலம் அது நிறைவேறியுள்ளது.மாநிலங்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உறுதியான நிலையை, அதிகாரம் அளிக்கும் குழு எடுத்து வருகிறது. ஜி.எஸ்.டி., கவுன்சில், மத்திய ஜி.எஸ்.டி., பற்றி பார்லிமென்டுக்கும், மாநில ஜி.எஸ்.டி., குறித்து சட்டசபைகளுக்கும் பரிந்துரை செய்யும் அமைப்பாகும்.
சொல்லப்போனால், சட்டசபை அதை ஏற்கலாம் அல்லது ஏற்காமலும் இருக்கலாம். எனவே சட்ட சபையின் இந்த அதிகாரம் பறிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இதன் மூலம் முக்கியமாக அவர் கூறியதாவது:வரி வீதங்களை பொறுத்த வரையில் மாநிலங்களும், மத்திய அரசும் ஒற்றை வரியை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. கூட்டாட்சி அமைப்பு முறையின் நலனைக் கருதி மாநிலங்களும், மத்திய அரசும் ஒரு வகையில் தியாகம் செய்துள்ளன.


ஒற்றை சந்தை


சேவை வரியைப் பொறுத்தவரை, ஜி.எஸ்.டி., மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கிறது. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில், 50 சதவீத சேவைகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.ஜி.எஸ்.டி.,யின் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த போது, முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:ஜி.எஸ்.டி., நுகர்வோர் மற்றும் மதிப்பீட்டாளருக்கு உகந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது.வரி செலுத்துவோர் காட்டிய நேர்மறை வெளிப்பாடு மற்றும் மதிப்பீட்டாளருக்கான தொழில்நுட்பத்திற்கு நன்றி. ஜி.எஸ்.டி, உண்மையில் இந்தியாவை ஒற்றை சந்தையாக மாற்றிஉள்ளது.இவ்வாறு அவர் பெருமைபட கூறியிருந்ததை இப்போதும் நினைவு கூரலாம்.
- நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X