வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-வங்கி மோசடிகள், நடப்பு நிதியாண்டில் மிகவும் குறைந்து விட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில், 2021 - 2022 நிதியாண்டில், 118 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், 2020 - 20-21 நிதியாண்டில், 265 வழக்குகள் பதிவாகியிருந்தன. அதேபோல், பொதுத்துறை வங்கிகளில், 2021 - 2022ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல், 80 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுவே, 2020 - 20-21 நிதியாண்டில், 167 ஆக இருந்தது. தனியார் வங்கிகளில் நடந்த மோசடிகள், 98ல் இருந்து 38 ஆக குறைந்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில், கடந்த நிதிஆண்டில் மோசடி தொகை, 65 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிதியாண்டில் அது, 28 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
அதேபோல், தனியார் வங்கிகளில், 39 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக இருந்த மோசடி தொகை, 13 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. வங்கிகளில் மோசடிகளை தடுக்க, பல கடும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.