வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-நம் நாட்டு தயாரிப்பான, 'தேஜஸ்' போர் விமானங்களை வாங்குவதற்கு மலேஷியா ஆர்வம் காட்டி வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு நிறுவனமான, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' தலைவரும், நிர்வாக இயக்குனருமான மாதவன் கூறியதாவது:தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் விமானப் படைக்கு புதிய போர் விமானங்கள் வாங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நம் நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்கள் மீது அவர்களுக்கு ஆர்வம் உள்ளது. இதற்கான பேச்சு நடந்து வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புஉள்ளது.
சீனாவின், ஜே.எப் 17, தென் கொரியாவின் எப்.ஏ 50, ரஷ்யாவின் மிக் 35 மற்றும் யாக் 130 போர் விமானங்களுக்கு கடும் போட்டியாக, நம் தேஜஸ் திகழ்கிறது. நம்மிடம் இருந்து தேஜஸ் போர் விமானங்களை மலேஷியா வாங்கும் பட்சத்தில், அவர்களிடம் உள்ள ரஷ்யாவின் சுகோய் 30 போர் விமானங்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் சேவைகளை அவர்கள் நாட்டிலேயே அமைத்து தர உறுதி அளித்துள்ளோம். இந்த உறுதியை மற்ற நாடுகளால் அளிக்க முடியாத நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.