காவிரி நீர் முறைப்படுத்தும் குழு; டில்லியில் நாளை ஆலோசனை

Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை--காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நாளை நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். முறைப்படி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுவினர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.காவிரியின்

சென்னை--காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நாளை நடைபெற உள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். முறைப்படி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுவினர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது.

இதனால், தமிழகத்திற்கான காவிரி நீரோட்டம் பாதிக்கும் என்பதால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேகதாது அணை கட்டும் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதம் நடத்தினால், இதற்கான அடுத்தகட்ட பணிகளை, கர்நாடகா அரசால் துவங்க முடியும். எனவே, அணை குறித்து காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதம் நடத்தும்படி, கர்நாடக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், 'விவாதம் நடத்த அனுமதிக்கப்படும்' என, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கூறியது, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன், 17ல் நடக்க இருந்தது. நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை குறித்த விவாதமும் இடம் பெற்றிருந்தது. தமிழக அரசின் எதிர்ப்பால், கூட்டம், 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றும் கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நாளை டில்லியில் நடக்க உள்ளது. நேரடி விவாதங்களை தவிர்ப்பதற்காக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்க, தமிழக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, நாளை மறுநாள் நடக்கவுள்ள, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து, தமிழக அரசு பிரதிநிதிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
04-ஜூலை-202203:13:38 IST Report Abuse
John Miller ஜுன் மாத்திற்கான தண்ணியை இன்னும் திறக்காமல் கர்நாடகம் சண்டி பண்ணிக்கொண்டு இருக்கின்றது. அண்ணாமலை வாயை திறப்பாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X