'எங்களுக்கும் ஓய்வூதியம்': மாநாட்டில் வலியுறுத்தல்

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
கோவை;'கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க, 14வது மாநாடு தலைவர் வடிவேலு தலைமையில் நடந்தது. மாநாட்டில், 'அரசால் நடத்தப்படும் வணிக வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல், கூட்டுறவு வங்கி

கோவை;'கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க, 14வது மாநாடு தலைவர் வடிவேலு தலைமையில் நடந்தது. மாநாட்டில், 'அரசால் நடத்தப்படும் வணிக வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு கோரிக்கை சாசனம் தமிழக அரசுக்கு சமர்பித்து, 17 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை; அதற்கு தீர்வு காண வேண்டும். விலை வாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தொழிலாளர் நல சட்டங்கள், 44யை நான்காக சுருக்கி திருத்தங்கள் செய்ததை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் அருணாசலம், அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் வைரப்பன், கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க துணைத்தலைவர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X