'மன அமைதியைகூட காசுகொடுத்து வாங்கும் நிலை'

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
கோவை;இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அரங்கில் நடந்த 'வாங்க சிரிக்கலாம்' நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.கோவை நகைச்சுவை சங்கம் மற்றும் பெமிலி நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் ராமச்சந்திரன் பங்கேற்று, 'அன்றும் இன்றும்' எனும் தலைப்பில் மிகவும் நகைச்சுவையாக உரையாற்றினார்.அவர் பேசியதாவது:ஒரு காலத்தில் மளிகைக் கடைக்காரர்

கோவை;இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அரங்கில் நடந்த 'வாங்க சிரிக்கலாம்' நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.கோவை நகைச்சுவை சங்கம் மற்றும் பெமிலி நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் ராமச்சந்திரன் பங்கேற்று, 'அன்றும் இன்றும்' எனும் தலைப்பில் மிகவும் நகைச்சுவையாக உரையாற்றினார்.அவர் பேசியதாவது:ஒரு காலத்தில் மளிகைக் கடைக்காரர் பொட்டலம் கட்டித்தருவதை பார்ப்பது கூட கலைநயமாக இருக்கும். ஆனால், இன்று பாக்கெட்டுகளில் பொருட்களை அடைப்பது முதல் 'பேக்கிங்' செய்வது வரை அனைத்தும் இயந்திரமயமாகி விட்டது. மாவு அரைக்க வீட்டில் மூன்று கிரைண்டர்கள் இருந்தாலும், கடையில்தான் மாவு பாக்கெட் வாங்குகிறோம். அந்த காலத்தில் தாய், தந்தைக்காகவும், உறவினர்களுக்காகவும் 'இன்க்' பேனாவில் கடிதம் எழுதுவாார்கள்; அதில் ஒரு உயிர் இருந்தது. ஆனால், இன்று மொபைல் போன்களில் கடமைக்கே என 'மெசேஜ்'களாக அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். பாரம்பரிய பழக்கவழக்கங்களை விட்டுவிட்டதால், இன்று மன அமைதியை கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.இவ்வாறு பேசினார்.இதில், ஸ்ரீ அன்னபூர்ணா குழும நிர்வாக இயக்குனர் சீனிவாசன், விஜய் பார்க்கின் ஓட்டல் நிர்வாக இயக்குனர் கோவை ரமேஷ், கோவை நகைச்சுவை மன்ற செயலாளர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X