இணை ஆய்வறிஞர் பணியிடம்:பாரதியார் பல்கலை அழைப்பு

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
கோவை:பாரதியார் பல்கலை மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தில் இணை ஆய்வறிஞர் பணியிடத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கோவை பாரதியார் பல்கலையில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், காணிநிலம் எனும் மகாகவி பாரதியார் உயராய்வு மையமும் ஒன்று. இங்கு பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இணை ஆய்வறிஞர் பணியிடத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில்

கோவை:பாரதியார் பல்கலை மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தில் இணை ஆய்வறிஞர் பணியிடத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கோவை பாரதியார் பல்கலையில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், காணிநிலம் எனும் மகாகவி பாரதியார் உயராய்வு மையமும் ஒன்று. இங்கு பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இணை ஆய்வறிஞர் பணியிடத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் ஓராண்டுக்கு மட்டும் பணிபுரிய தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆராய்ச்சியில் அனுபவம், ஆய்வுத் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் திறன், தமிழ், ஆங்கில தட்டச்சுத் திறன், தமிழ், ஆங்கில மொழிகளில் தேர்ந்த அறிவு, கம்ப்யூட்டர் பயன்பாட்டு அறிவு உள்ளிட்டவை இருக்க வேண்டும். தவிர, ஆய்வுத்திட்டங்கள் நிறைவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு, ரூ.35 ஆயிரம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்கலை இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சித்ரா, இயக்குனர், மகாகவி பாரதியார் உயராய்வு மையம், தமிழ்த்துறை வளாகம், பாரதியார் பல்கலை, கோவை-641046 என்ற முகவரிக்கு வரும், 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தகுதியானோர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர் என, பாரதியார் பல்கலை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X