விடுதிகளில் சேர்க்கை புரிய விண்ணப்பங்கள் 'ரெடி': பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
கோவை;கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர், மாணவியர் விடுதிகளில் சேர்க்கைபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் பள்ளி மாணவர்களுக்கு, 12 விடுதகள், மாணவிகளுக்கு ஆறு, கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,மாணவர்களுக்கு,

கோவை;கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர், மாணவியர் விடுதிகளில் சேர்க்கைபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் பள்ளி மாணவர்களுக்கு, 12 விடுதகள், மாணவிகளுக்கு ஆறு, கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,மாணவர்களுக்கு, 9, மாணவிகளுக்கு இரு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் நான்கு முதல் பிளஸ்2 வகுப்பு வரையும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சேர்க்கைபுரிய தகுதியானவர்கள். உணவு, சீருடை, தங்கும் வசதி உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படுகிறது.பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். படிக்கும் கல்வி நிலையம் இருப்பிடத்திலிருந்து குறைந்தபட்சம், 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும்; துார விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர்களிடம் இருந்து அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும், 20ம் தேதிக்குள்ளும், கல்லுாரி விடுதிகளை பொறுத்தவரை வரும், 31ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு என்று தனியாக ஐந்து இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எந்த நேரத்திலும் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்; அவர்களின் படிப்பு முடியும் வரை தங்கி படிக்க அனுமதிக்கலாம். விபரங்களுக்கு, 0422 2300404 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X