அரசு பொருட்காட்சியில் குஷி அடைந்த மலைவாழ் மக்கள்| Dinamalar

அரசு பொருட்காட்சியில் 'குஷி' அடைந்த மலைவாழ் மக்கள்

Added : ஜூலை 04, 2022 | |
கோவை;அரசு பொருட்காட்சியை சுற்றிப்பார்த்த மலைவாழ் மக்கள் ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டுக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.கோவை சிறை மைதானத்தில் நடந்துவரும் அரசு பொருட்காட்சியில், மாநில அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.இந்நிலையில், நகர வளர்ச்சி, கேளிக்கைகள் குறித்து அறிந்திராத மலைவாழ் மக்களை இங்கு அழைத்து வந்து
அரசு பொருட்காட்சியில் 'குஷி' அடைந்த மலைவாழ் மக்கள்

கோவை;அரசு பொருட்காட்சியை சுற்றிப்பார்த்த மலைவாழ் மக்கள் ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டுக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.கோவை சிறை மைதானத்தில் நடந்துவரும் அரசு பொருட்காட்சியில், மாநில அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.இந்நிலையில், நகர வளர்ச்சி, கேளிக்கைகள் குறித்து அறிந்திராத மலைவாழ் மக்களை இங்கு அழைத்து வந்து உற்ச்சாகத்தில் ஆழ்த்தியிருக்கின்றனர் கோவை மாவட்ட நிர்வாகத்தினர்.கலெக்டர் சமீரன் உத்தரவின்படி, நான்கு பஸ்களில் அழைத்துவரப்பட்ட வெள்ளியங்காடு, பில்லுார் மலைவாழ் மக்கள், 110 பேர் பொருட்காட்சியை நேற்று கண்டு ரசித்தனர். மலைகளிலும், மலை கிராமங்களிலும் வாழும் பழங்குடிகள் ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளையும் கண்டு கழித்தனர். அவர்களுக்கு இலவச உணவு, கண்காட்சி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வடக்கு வட்டாட்சியர் பூமா கூறுகையில்,''ஆறு கிராமங்களை சேர்ந்த, 38 செட்டில்மென்ட்டின், 110 பேர் இங்கு வந்துள்ளனர்; இவர்கள் வனக்குழு கமிட்டியை சேர்ந்தவர்கள். வன உரிமைச்சட்டம், 2006ன் கீழ் அவர்களுக்கு உள்ள சமுதாய உரிமைகளை வாங்கித்தருவதை நோக்கமாக கொண்டு, மாவட்ட நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வன உரிமைக்குழு மூலம் கோவை மாவட்டத்தில், முதல் முறையாக ஜி.பி.எஸ்., முறையில், 'இ-டிராக்' முறையில் காட்டுப்பகுதியின் எல்லையை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், தாசில்தார், வனப்பாதுகாப்பு அலுவலர், மலைவாழ் மக்கள் இணைந்து செயல்பட உள்ளனர். அரசின் நடவடிக்கைகள் குறித்து மலைவாழ் மக்கள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு வேலை நேரத்தில் அவர்கள் அரசு பொருட்காட்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து மலைவாழ் மக்கள் பலரும் இங்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X