தபால் ஓய்வூதியர்குறைதீர் கூட்டம்| Dinamalar

தபால் ஓய்வூதியர்குறைதீர் கூட்டம்

Added : ஜூலை 04, 2022 | |
கோவை:தபால் துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும். இக்கூட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு, காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் கிடைக்காமல் இருப்பது, ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதது, முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குறைகளுக்கு தீர்வு வழங்கப்படும். இந்நிலையில், மண்டல அளவிலான ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம், வரும்,

கோவை:தபால் துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும். இக்கூட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு, காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் கிடைக்காமல் இருப்பது, ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதது, முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குறைகளுக்கு தீர்வு வழங்கப்படும். இந்நிலையில், மண்டல அளவிலான ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம், வரும், 18ம் தேதி, கோவை தபால் நிலைய, முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை வரும், 13ம் தேதிக்குள், தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர், கோவை மண்டலம், கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X