முக கவசம் அணிந்துபள்ளி வரும் மாணவர்கள்

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
திருப்பூர்;தமிழகத்தில், 12 சதவீத தொற்று பாதிப்புகள், கல்வி நிறுவனங்களில் கண்டறியப்பட்டுள்ளதால், பள்ளிகளில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 10 மாநிலங்களில் கொேரானா பரவல் வேகம் எடுத்துள்ளன. தமிழகத்தில் தினமும், 2 ஆயிரம் பேர் என்ற அளவில் தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தற்போதைய தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு எளிதில் பரவி
முக கவசம் அணிந்துபள்ளி வரும் மாணவர்கள்

திருப்பூர்;தமிழகத்தில், 12 சதவீத தொற்று பாதிப்புகள், கல்வி நிறுவனங்களில் கண்டறியப்பட்டுள்ளதால், பள்ளிகளில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 10 மாநிலங்களில் கொேரானா பரவல் வேகம் எடுத்துள்ளன. தமிழகத்தில் தினமும், 2 ஆயிரம் பேர் என்ற அளவில் தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தற்போதைய தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு எளிதில் பரவி விடுவதால், அனைத்து கல்லுாரி மற்றும் பள்ளிகளிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி ஆணையர் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ''ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படுகிறது. மாணவர் சேர்க்கை பணிகள், மற்றும் உடற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளதால், பள்ளிகளில் மாணவர்கள், பணியாளர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
பள்ளி வளாகத்தில் நுழையும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களை, வெப்ப பரிசோதனை செய்த பின் அனுமதிக்க வேண்டும்.சராசரி வெப்பத்தை விட அதிகமாக காணப்பட்டால், சோதனைக்கு உட்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கைகளை சுத்தம் செய்ய, சோப்பு, கைகளை சுத்தம் செய்யும் திரவம் வைத்திருக்க வேண்டும்.தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்த போதுமான அறிவுரை வழங்க வேண்டும்''என்று அறிவுறுத்திஇருந்தார்.இதை தொடர்ந்து, திருப்பூரில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் அணிந்துவரத் துவங்கியுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X