வேளாண் தொழிலாளர் பற்றாக்குறை:சமாளிக்க உதவும் நவீன கருவிகள்

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
திருப்பூர்:தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, களையெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விவசாய பணிகளிலும், இயந்திரங்களே கைகொடுத்து வருகிறது.மாவட்டத்தில், நீண்ட கால பயிராக தென்னை, மாமரங்கள் பராமரிக்கப்படுகிறது. கரும்பு, வாழை, சின்னவெங்காயம் மற்றும் ஒவ்வொரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. பி.ஏ.பி., பாசனத்தில், நெல், மக்காச்சோளம், சோளம் மற்றும்

திருப்பூர்:தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, களையெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விவசாய பணிகளிலும், இயந்திரங்களே கைகொடுத்து வருகிறது.மாவட்டத்தில், நீண்ட கால பயிராக தென்னை, மாமரங்கள் பராமரிக்கப்படுகிறது. கரும்பு, வாழை, சின்னவெங்காயம் மற்றும் ஒவ்வொரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. பி.ஏ.பி., பாசனத்தில், நெல், மக்காச்சோளம், சோளம் மற்றும் தானியங்கள் சாகுபடியாகிறது.விவசாய சாகுபடியில், தற்போது அனைத்துப்பகுதிகளிலும், தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. நடவு முதல் அறுவடை வரை, குறித்த நேரத்துக்கு, ஆட்கள் கிடைக்காதது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, தென்னந்தோப்பு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதும் அதிகரித்துள்ளது.இருப்பினும், சிறு, குறு விவசாயிகள், காய்கறி சாகுபடியாளர்களுக்கு, சீசன் சமயங்களில், தொழிலாளர் கிடைக்காமல், பாதிக்கின்றனர். எனவே, படிப்படியாக, சாகுபடி பணிகளுக்கு, கருவிகளையும், இயந்திரங்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.காய்கறி சாகுபடியில், மேட்டுப்பாத்தி அமைத்து, இடைவெளியில், களையெடுக்க, 'கோனோவீடர்' கருவியை பயன்படுத்துகின்றனர். அதே போல், தென்னை, மாமரங்களுக்கு இடையே, களைச்செடி, பார்த்தீனிய செடிகளை, அகற்ற, 'கட்டர்' இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர்.இவ்வகை இயந்திரத்தை சொந்தமாகவும் வாங்கி, பயன்படுத்துகின்றனர். சில பகுதிகளில், விவசாயிகள், ஒரு மணி நேரத்துக்கு, 250 ரூபாய் வாடகைக்கு, இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, புதிய வகை கருவிகள் உதவுகிறது. களையெடுத்தல் பணிக்கு பரவலாக இயந்திரங்களை பயன்படுத்துகிறோம். அதே போல், விதை, நாற்று நடவு பணிக்கு கருவிகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய கருவி, இயந்திரங்களை, விவசாய ஆர்வலர் குழுக்களுக்கு, கிராமம்தோறும் வழங்கினால், அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X