எம்.எல்.ஏ., வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
திருப்பூர்;திருப்பூரில், எம்.எல்.ஏ., செல்வராஜ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.திருப்பூர், வேலம்பாளையம், மகாலட்சுமி நகரில் உள்ள மத வழிபாட்டு தலத்துக்கு 'சீல்' வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒருதரப்பினர் போராட்டம் நடத்தினர்.இந்த விவகாரத்தில், ஒரு தரப்புக்கு ஆதரவாக, திருப்பூர் தெற்குஎம்.எல்.ஏ., செல்வராஜ், முதல்வருக்கு கடிதம் அனுப்பியதாக புகார் எழுந்தது.
எம்.எல்.ஏ., வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருப்பூர்;திருப்பூரில், எம்.எல்.ஏ., செல்வராஜ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.திருப்பூர், வேலம்பாளையம், மகாலட்சுமி நகரில் உள்ள மத வழிபாட்டு தலத்துக்கு 'சீல்' வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒருதரப்பினர் போராட்டம் நடத்தினர்.இந்த விவகாரத்தில், ஒரு தரப்புக்கு ஆதரவாக, திருப்பூர் தெற்குஎம்.எல்.ஏ., செல்வராஜ், முதல்வருக்கு கடிதம் அனுப்பியதாக புகார் எழுந்தது. இதற்கு,ஹிந்து முன்னணி, பா.ஜ., வினர், ஹிந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.எம்.எல்.ஏ., வீட்டை முற்றுகையிட உள்ளதாக ஹிந்து முன்னணியினர் அறிவித்து இருந்தனர்.எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவாக, மற்றொரு தரப்பினர், ஹிந்து முன்னணியை கண்டித்து அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தனர். போராட்டத்தை அறிவித்த அமைப்புகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.போராட்ட அறிவிப்புகளையடுத்து, கொங்கு நகர் விரிவு 3வது வீதியில் உள்ள செல்வராஜ் வீட்டையொட்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X