'பயோ மைனிங்' பணிக்கு மறு டெண்டர்

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
அவிநாசி:அவிநாசியில், 49.30 லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்ட 'பயோ மைனிங்' முறையில் குப்பை அகற்றும் பணி, வெறும், 20 சதவீதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில், பணி, பாதியில் கைவிடப்பட்டதால், மறு டெண்டர் விடப்பட்டுள்ளது.அவிநாசி பேரூராட்சி பகுதியில், தினமும், 12 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை, கைகாட்டிபுதுாரில் உள்ள வளம் மீட்பு பூங்கா மற்றும் புதிய பஸ்
'பயோ மைனிங்' பணிக்கு மறு டெண்டர்

அவிநாசி:அவிநாசியில், 49.30 லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்ட 'பயோ மைனிங்' முறையில் குப்பை அகற்றும் பணி, வெறும், 20 சதவீதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில், பணி, பாதியில் கைவிடப்பட்டதால், மறு டெண்டர் விடப்பட்டுள்ளது.அவிநாசி பேரூராட்சி பகுதியில், தினமும், 12 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை, கைகாட்டிபுதுாரில் உள்ள வளம் மீட்பு பூங்கா மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட்பின்புறமுள்ள குப்பைக்குழியில் கொட்டப்படுகிறது.தேங்கியுள்ள குப்பையை 'பயோ மைனிங்' முறையில் அகற்ற, 49.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த, 2020ல் பணி டெண்டர் விடப்பட்டு, பணி துவங்கியது.பிளாஸ்டிக், இரும்பு, மண் என குப்பையில் கலந்துள்ள பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்படுவதுதான் திட்டத்தின் நோக்கம். இப்பணி ஓராண்டில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரரால் பணியை சரிவர செய்ய முடியவில்லை.மொத்தம், 7,583 கன மீட்டர் அளவுக்கு குப்பை அகற்றப்பட வேண்டும் என, நிபந்தனை வரையறுக்கப்பட்ட நிலையில், அவர்களால், வெறும், 1,365 கன மீட்டர் குப்பையை மட்டுமே அகற்ற முடிந்தது; ஒதுக்கப்பட்ட, 49.30 லட்சம் ரூபாயில், 9.20 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே பணி செய்துள்ளனர்; சுமார், 20 சதவீத பணிகள் மட்டுமே செய்து முடிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர் பின்வாங்கினார்.இதையடுத்து, குப்பை மேலாண்மை பணியில் தொய்வு ஏற்பட்டது. ஏற்கனவே இருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு,பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எஞ்சிய பணிக்கு, மறு டெண்டர் விடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X