வாரச்சந்தை பொலிவாகிறது

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
அவிநாசி;தத்தனுார் ஊராட்சியில் உள்ள பழமையான வாரச்சந்தை, மேம்படுத்தப்பட்ட சந்தையாக தரம் உயர்த்தும் பணி வேகமெடுத்துள்ளது.அவிநாசி ஊராட்சி ஒன்றியம், சேவூர் அருகேயுள்ள தத்தனுார் ஊராட்சி, பொங்கேகவுண்டம்புதுார் வாரச்சந்தை மிகப்பழமையானது. வாரம் ஒருமுறை கூடும் இச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம்.இச்சந்தையை மேம்படுத்த, கடந்த, அக்., 2020ல், அவிநாசி

அவிநாசி;தத்தனுார் ஊராட்சியில் உள்ள பழமையான வாரச்சந்தை, மேம்படுத்தப்பட்ட சந்தையாக தரம் உயர்த்தும் பணி வேகமெடுத்துள்ளது.அவிநாசி ஊராட்சி ஒன்றியம், சேவூர் அருகேயுள்ள தத்தனுார் ஊராட்சி, பொங்கேகவுண்டம்புதுார் வாரச்சந்தை மிகப்பழமையானது. வாரம் ஒருமுறை கூடும் இச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம்.இச்சந்தையை மேம்படுத்த, கடந்த, அக்., 2020ல், அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சார்பில், 44.96 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பூமி பூஜை போடப்பட்டது. கொரோனா ஊரடங்கு, தொழிலாளர் கிடைக்காமை உள்ளிட்ட பல காரணங்களால், பணி துவக்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.''சந்தையை சுற்றி தடுப்புச்சுவர், புதிய கடைகள் கட்டப்பட உள்ளன. இதன் மூலம், சந்தை மேம்படுத்தப்படும்; அதிகளவில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறுவர்" என, ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X