'பால் காய்ச்சி' போனதுமே, சுவரில் 'ஊற்று' பொங்குது!

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
அவிநாசி;'அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் கசிவு, கழிவுநீர் தொட்டி அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்து கொடுக்க வேண்டும்' என, பயனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், குடிசை மாற்று வாரியம் சார்பில், அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள சூளையில், 2.92 ஏக்கர் நிலத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.மொத்தம் 32 கோடி ரூபாய் மதிப்பில், 448 வீடுகள்
'பால் காய்ச்சி' போனதுமே, சுவரில் 'ஊற்று' பொங்குது!

அவிநாசி;'அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் கசிவு, கழிவுநீர் தொட்டி அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்து கொடுக்க வேண்டும்' என, பயனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், குடிசை மாற்று வாரியம் சார்பில், அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள சூளையில், 2.92 ஏக்கர் நிலத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.மொத்தம் 32 கோடி ரூபாய் மதிப்பில், 448 வீடுகள் கட்டப்பட்டன. கடந்த, 6 மாதமாக, படிப்படியாக பயனாளிகள் குடியேறி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டுக்கும், 82 ஆயிரம் ரூபாய், பயனாளிகளிடம் பங்களிப்பு தொகையாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், 95 சதவீத வீடுகளில் மக்கள் குடியேறிவிட்டனர்.இங்கு வேகமாக கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டு, முடிக்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கீழ் தளத்தில் உள்ள வீடுகளின் சுவரில் கூட தண்ணீர் கசிவு ஏற்படுகிறது.பொதுவாக, வீடுகளில் கூரை பகுதியில் தான் தண்ணீர் கசிவு இருக்கும் என்ற நிலையில், சில வீடுகளில் தரை பகுதியை ஒட்டிய சுவற்றில் கூட தண்ணீர் கசிகிறது என, குடியிருப்புவாசிகள் புகார் கூறுகின்றனர்.பல வீடுகளில் கழிவறையில் இருந்த வெளியேறும் கழிவு, குழாயில் சரியாக வெளியேறாமல், அடைப்பு ஏற்படுகிறது; சாக்கடை நீர் கூட சரிவர வெளியேறுவதில்லை; இதனால், துர்நாற்றம் வீசி, சுகாதார கேடு ஏற்படுகிறது என, குடியிருப்புவாசிகள் குமுறுகின்றனர்.வீடுகளின் பால்கனியில் வெறும் கம்பி மட்டுமே போடப்பட்டுள்ளது; வசதியுள்ளவர்கள் தடுப்பு வைத்து கொள்ளும் நிலையில், பலர் தடுப்பு இல்லாமல் இருப்பதால், கீழ் தளத்தில் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும், குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.'இத்தகைய பிரச்னைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் என நகர்ப்புற வாழ்வாதார திட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவர்களும் அவ்வப்போது வந்து ஆய்வு மேற்கொண்டு செல்கின்றனர்.'பால் காய்ச்சி' போனதுமே பிரச்னை துவங்கிவிட்டது; ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என புலம்பும் குடியிருப்புவாசிகள், இப்பிரச்னையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X