டி.புதுாரில் ஒருவர் வெட்டிக் கொலை

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
போலீஸ் விசாரணைசிவகங்கை: சிவகங்கை அருகே டி.புதுார் பகுதியை சேர்ந்தவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.டி.புதுார் 7வது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராகவானந்தம் 43, இவர் அலைபேசி கோபுரம் அமைக்கும் பணியில் இருந்தார். மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது பணிக்கு செல்லவில்லை. இவரை இவரது தந்தை


போலீஸ் விசாரணைசிவகங்கை: சிவகங்கை அருகே டி.புதுார் பகுதியை சேர்ந்தவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.டி.புதுார் 7வது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராகவானந்தம் 43, இவர் அலைபேசி கோபுரம் அமைக்கும் பணியில் இருந்தார். மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது பணிக்கு செல்லவில்லை.

இவரை இவரது தந்தை ஆறுமுகம், தாய் மீனா ஆகியோர் சொந்த வீட்டில் தனியாக விட்டுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.நேற்று காலை உடலில் வெட்டுக்காயங்களுடன் ராகவானந்தம் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவானந்தம் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.கஞ்சா கடத்திய இளைஞர்கள் கைதுசிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே டூவீலரில் கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சதுர்வேதமங்கலம் எஸ்.ஐ , அந்தோணி மணிவேல் ஜூலை 3 ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு பிரான்மலை பகுதியில் ரோந்து சென்றார். டூவீலரில் வந்த 2 இளைஞர்களை நிறுத்தி சோதனையிட்டதில் அவர்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது .விசாரணையில் பூலாங்குறிச்சி அருகே மிதலைப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் சந்தோஷ் 21, புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளம் பாலசுப்பிரமணியன் மகன் பழனிச்சாமி 19 என்பது தெரிந்தது. இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சாவை வாங்கி சொந்த ஊரில் விற்பதற்காக சென்றதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X