'நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க!'ஸ்ரீமாணிக்கவாசகர் குரு பூஜை கோலாகலம்

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
திருப்பூர்;ஸ்ரீமாணிக்கவாசக சுவாமி குருபூஜையை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.'திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பர். திருவாசகத்தை, ஸ்ரீமாணிக்கவாசகர் சொல்ல, சிவபெருமான் கைப்பட எழுதியதாக ஆன்மிகவியலாளர்கள் கூறுகின்றனர்.சமயக்குறவர் நால்வரில் ஒருவராக போற்றப்படும்
'நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க!'ஸ்ரீமாணிக்கவாசகர் குரு பூஜை கோலாகலம்

திருப்பூர்;ஸ்ரீமாணிக்கவாசக சுவாமி குருபூஜையை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.'திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பர். திருவாசகத்தை, ஸ்ரீமாணிக்கவாசகர் சொல்ல, சிவபெருமான் கைப்பட எழுதியதாக ஆன்மிகவியலாளர்கள் கூறுகின்றனர்.சமயக்குறவர் நால்வரில் ஒருவராக போற்றப்படும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நேற்று நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காலை, 7:00 மணி முதல், மதியம் வரை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.மாணிக்கவாசகர் அடியார் கூட்டம், அர்த்தஜாம பூஜை சிவனடியார் திருக்கூட்டத்தினர், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் சார்பில், முற்றோதல் நடைபெற்றது.சைவத்திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ள திருவாசகத்தின், 51 பகுதிகளையும், 658 பாடல்களையும், பண்ணுடன் பாடி சிவபெருமானை வழிபட்டனர். 'நமசிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க' என்ற மாணிக்கவாசகரின் வரிகள், ஒலித்தன. மாணிக்கவாசகருக்கு, பல்வகை திரவியங்களால் அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X