'விடுபட்ட குளம், குட்டை; திட்டத்தில் சேர்க்கணும்'

Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், திருப்பூர் வடக்கு ஒன்றிய பேரவை கூட்டம், பெருமாநல்லுாரில் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். துணை தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, நடராஜன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் வெங்கடாசலம்,
'விடுபட்ட குளம், குட்டை; திட்டத்தில் சேர்க்கணும்'

திருப்பூர்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், திருப்பூர் வடக்கு ஒன்றிய பேரவை கூட்டம், பெருமாநல்லுாரில் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். துணை தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, நடராஜன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் வெங்கடாசலம், துவக்கி வைத்தார்.ஒன்றிய செயலாளர் அப்புசாமி, செயல் அறிக்கையை சமர்ப்பித்தார். சி.ஐ.டி.யு., பஞ்சாலை சங்க பொருளாளர் பழனிசாமி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் வாழ்த்தி பேசினர்.மாவட்ட செயலாளர் குமார், சி.ஐ.டி.யு.,நிர்வாகி கருப்புசாமி பேசினர். புதிய தலைவராக ரங்கசாமி, செயலாளராக அப்புசாமி, பொருளாளராக ஆறுமுகம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில், வடக்கு ஒன்றிய பகுதிகளில் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும். வேளாண்துறை மூலம் வழங்கப்படும், விதை, இடுபொருள், கருவிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெருமாநல்லுார், பூலுவபட்டி சுற்றுப்பகுதியில், கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்.மின் திட்டங்களால் பாதிக்கும் விவசாயிகளுக்கு, 10 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்க வேண்டும்.மான் மற்றும் மயில்களால் நஷ்டமடையும் விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Coimbatore,இந்தியா
04-ஜூலை-202214:03:37 IST Report Abuse
CBE CTZN நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் irunthu panam pera vali seiyungal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X